தோனியின் கண்களுக்கு அவர் அடுத்த சிஎஸ்கே கேப்டனாக தெரியுறாரு.. துணை கேப்டனா பாப்பீங்க.. ரெய்னா கணிப்பு

Suresh Raina 3
- Advertisement -

ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இம்முறையும் அந்த அணியை 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக திகழும் ஜாம்பவான் எம்எஸ் தோனி வழி நடத்த உள்ளார். கடந்த வருடம் துஷார் தேஷ்பாண்டே போன்ற வீரர்களை வைத்தே சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அவர் முழங்கால் வலியையும் தாண்டி 5வது கோப்பையை வெல்ல உதவினார்.

ஆனாலும் தற்போது 41 வயதை கடந்து விட்டதால் இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகளும் எதிர்பார்ப்புகளும் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தோனிக்கு பதிலாக கேப்டனாக செயல்படப் போவது யார்? என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது. அது போன்ற சூழ்நிலையில் ஜடேஜா மீண்டும் கேப்டனாக செயல்பட மாட்டார் என்பது மட்டும் உறுதியாக சொல்லலாம்.

- Advertisement -

அடுத்த கேப்டன்:
ஏனெனில் 2022 சீசனில் தோனி உறுதுணையாக இருந்தும் அழுத்தமற்ற கேப்டன்ஷிப் பதவியில் தடுமாறிய ஜடேஜா தலைமையில் சுமாராக விளையாடிய சென்னை தோல்விகளை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அந்தப் பதவியே வேண்டாம் என்று ஜடேஜா மீண்டும் கேப்டன்ஷிப் பொறுப்பை தோனியிடமே ஒப்படைத்து விட்டார்.

இந்நிலையில் ஒருவேளை தோனி ஓய்வு பெற்றால் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கைக்வாட் செயல்படுவதற்கு தகுதியானவர் என்று சின்ன தல சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அதனால் இம்முறை தோனி அவரை தன்னுடைய துணை கேப்டனாக அறிவிப்பதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் ரெய்னா இது பற்றி பேசியது பின்வருமாறு. “அடுத்த கேப்டன் யார் என்பதே சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய கேள்வியாகும்”

- Advertisement -

“ஒருவேளை தோனி கேப்டனாக விலகினாலும் கூட அவர் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர் போன்ற ஏதோ ஒரு வேலையில் இருப்பார். ஆனால் அடுத்த கேப்டன் யார் என்பது கேள்வியாகும். இது சிஎஸ்கே அணிக்கு முக்கியமான வருடமாகும். அது போன்ற சூழ்நிலையில் தோனியின் கண்களில் கேப்டனாக யாரை வைத்துள்ளார்? ருதுராஜ் நல்ல தேர்வாக இருப்பார். எனவே எம்எஸ் தோனியை விட இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு முக்கியமானதாக இருக்கும்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 தொடரில் பட்டாசு மாதிரி விளையாடி குறைஞ்சது 500 ரன்ஸ் அடிப்பாரு.. இந்திய வீரர் மீது ஏபிடி நம்பிக்கை

“ஏனெனில் இம்முறை தோனி தன்னுடைய துணை கேப்டனை கைகாட்டி அவரிடம் “நான் இந்த அணியை 2008 முதல் கையாண்டு வருகிறேன். இனிமேல் நீங்கள் இந்த மஞ்சள் படையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து பெவிலியனில் உட்காருகிறேன்” என்று சொல்வதற்கான வாய்ப்புள்ளது. தற்போது 42 வயதாகும் தோனி தன்னுடைய வருங்காலத்தை எப்படி திட்டமிடுகிறார் என்பதை பார்ப்பது முக்கியம். அவர் இன்னும் 5 அல்லது குறைந்தது 2 – 3 வருடங்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement