ஐபிஎல் 2024 தொடரில் பட்டாசு மாதிரி விளையாடி குறைஞ்சது 500 ரன்ஸ் அடிப்பாரு.. இந்திய வீரர் மீது ஏபிடி நம்பிக்கை

AB De Villiers 8
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஐபிஎல் 2024 டி20 தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. வழக்கம் போல இம்முறையும் கோப்பையை வென்று சாதனை படைப்பதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. இந்த வருடம் ரிங்கு சிங், துருவ் ஜுரேல், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏனெனில் அந்த வீரர்கள் கடந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு அனைவரது பாராட்டுகளை பெற்றனர். அதன் காரணமாக இந்திய அணிக்காகவும் அறிமுகமான அவர்கள் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்து தங்களை வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

ஏபிடி நம்பிக்கை:
இந்நிலையில் 2024 ஐபிஎல் சீசன்னில் 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் பட்டாசு போல விளையாடி குறைந்தது 500 – 600 ரன்கள் அடிப்பார் என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஒரு பையனின் ஆட்டத்தை பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. அவர் தான் ஜெய்ஸ்வால்”

“அவர் எந்தளவுக்கு தன்னை திறமையானவர் என்பதை டெஸ்ட் கிரிக்கெட்டில் காண்பித்துள்ளார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அவர் தன்னுடைய உண்மையான திறமையை காண்பிக்கும் நேரம் வந்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கிடைத்துள்ள பெரிய தன்னம்பிக்கையுடன் ஐபிஎல் தொடருக்கு வரும் அவரிடம் பட்டாசு போன்ற ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன். எனவே இந்த சீசனில் குறைந்தது 500 அல்லது 600+ ரன்களை அவர் அடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.

- Advertisement -

முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார். அது போக ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக (13 பந்துகள்) அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

இதையும் படிங்க: மூளையில்லாத வேலை.. நல்லா இருந்த டீமை கெடுத்து விட்டதை நம்பவே முடியல.. ஹைதெராபாத் மீது அஸ்வின் அதிருப்தி

அதன் காரணமாகவே இந்தியாவுக்காக அறிமுகமான அவர் இதுவரை கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக நடைபெற்று முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிக்ஸர்களை வெளுத்து வாங்கிய அவர் 712 ரன்கள் அடித்து தொடர்நாயகன் விருது வென்றார். அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்த ஐபிஎல் தொடரிலும் வெளுத்து வாங்குவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement