மூளையில்லாத வேலை.. நல்லா இருந்த டீமை கெடுத்து விட்டதை நம்பவே முடியல.. ஹைதெராபாத் மீது அஸ்வின் அதிருப்தி

- Advertisement -

ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பட் கமின்ஸ் தலைமையில் களமிறங்க உள்ளது. ஆஸ்திரேலியாவுக்காக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களை ஒரே வருடத்தில் கேப்டனாக வென்று கொடுத்த அவரை ஏலத்தில் 20.50 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு ஹைதராபாத் நிர்வாகம் வாங்கியது.

எனவே தரமான வேகப்பந்து வீச்சாளராக அறியப்படும் அவரை தற்போது ஹைதராபாத் நிர்வாகம் புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு மீது ஏபி டீ வில்லியர்ஸ், இர்பான் பதான் போன்ற சில முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 தொடரில் கடந்த வருடம் ஹைதராபாத் கிளையான சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு ஐடன் மார்க்ரம் கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்தார்.

- Advertisement -

அஸ்வின் அதிருப்தி:
அதனால் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவருடைய தலைமையில் கடந்த வருடம் ஹைதராபாத் லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த சூழ்நிலையில் 2024 எஸ்ஏ20 தொடரில் மீண்டும் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஐடன் மார்க்ரம் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து சாதனை படைத்தார். ஆனாலும் கேப்டன்ஷிப் அனுபவமிக்க அவரை ஹைதராபாத் நிர்வாகம் ஐபிஎல் தொடரில் ஒரே வருடத்துடன் கழற்றி விட்டுள்ளது.

இந்நிலையில் ஐடன் மார்க்ரம் கழற்றி விடப்பட்டதை தம்மால் நம்ப முடியவில்லை என்று ரவிச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் பட் கமின்ஸ் கேப்டனாக செயல்படுவதால் 4 சரியான வெளிநாட்டு வீரர்களை வைத்து பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் ஹைதராபாத்துக்கு சிரமம் ஏற்படும் என்று அஸ்வின் கணித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“எஸ்ஏ20 டி20 தொடரில் சன் ரைசர்ஸ் அடுத்தடுத்த கோப்பைகளை வென்றுள்ளது. அப்படி இருந்தும் அவர்கள் பட் கமின்ஸை கேப்டனாக அறிவித்துள்ளது என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் மார்க்ரமுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற பெரிய எண்ணம் எனக்கு இருந்தது. ஏனெனில் எஸ்ஏ டி20 தொடரில் அவர் தன்னுடைய அணிக்காக அபாரமாக செயல்பட்டார். அதனால் பட் கமின்ஸ் அறிவிக்கபட்டது மூளையில்லாத முடிவாகும்”

இதையும் படிங்க: 2008 முதல் 2024 வரை.. ஐபிஎல் வரலாற்றி காலத்தை கடந்து உயர்த்து நிற்கும் காவியத்தலைவன் – எம்எஸ் தோனி

“ஏனெனில் அவர் கேப்டனாக இருக்கும் போது அணியில் நட்சத்திர வீரர்களால் பிரச்சனை உருவாகும். குறிப்பாக டிராவிஸ் ஹெட்டை பேக்-அப் வீரராக வைத்துக் கொண்டு அவர்கள் மார்க்ரம், கமின்ஸ், ஹென்றிச் கிளாசின், ஹஸரங்கா ஆகியோரை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் ஹசரங்கா அவர்களுக்கு முக்கியமானவர். ஒருவேளை சில மைதானங்களில் ஹஸரங்கா தேவையில்லாமல் போனால் பரூக்கி அல்லது மார்க்கோ யான்சன் தேவைப்படுவர்” என்று கூறினார்.

Advertisement