2008 முதல் 2024 வரை.. ஐபிஎல் வரலாற்றி காலத்தை கடந்து உயர்த்து நிற்கும் காவியத்தலைவன் – எம்எஸ் தோனி

- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 2024 சீசன் மார்ச் 22ஆம் தேதி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்குகிறது. இந்த தொடரில் 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் லட்சியத்துடன் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகத்தான ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி வரலாற்றில் 15வது முறையாக கேப்டனாக செயல்பட உள்ளார்.

கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது மும்பைக்கு சச்சின், கொல்கத்தாவுக்கு கங்குலி என அந்தந்த மாநில நட்சத்திரங்கள் கேப்டனாக செயல்பட்டனர். இருப்பினும் அப்போது சென்னையில் அப்படியொரு வீரர் இல்லாததால் 2007 உலகக் கோப்பை இந்தியாவுக்கு வென்று கொடுத்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த எம்எஸ் தோனியை சாதனை தொகைக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியது.

- Advertisement -

மகத்தான தோனி:
அதன் பின் நடந்தது அனைத்தும் வரலாறு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் முதல் வருடத்திலேயே ஹெய்டன், முரளிதரன் போன்ற ஜாம்பவான்களை சரியாக வழி நடத்திய தோனி சென்னையை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். அந்தத் தொடரில் கோப்பை கைநழுவிச் சென்றாலும் மனம் தளராத தோனி 2010ஆம் ஆண்டு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பையை தோற்கடித்து சிஎஸ்கே அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுத்தார்.

அந்த சீசனில் பஞ்சாப்புக்கு எதிரான முக்கிய போட்டியில் அவர் கொடுத்த அபாரமான ஃபினிஷிங் சிஎஸ்கே அணியை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்துச் சென்றதை மறக்க முடியாது. அதை விட மும்பைக்கு எதிரான இறுதிப் போட்டியில் கைரன் பொல்லார்ட் காட்டுத்தனமாக அடித்து சென்னையின் வெற்றியை கேள்விக்குறியாக்கினார். அப்போது எந்த கேப்டனும் யோசிக்காத அளவுக்கு வித்தியாசமாக சிந்தித்த தோனி நேராக மேத்தியூ ஹெய்டனை நிற்க வைத்து பொல்லார்ட்டை அவுட்டாக்கி கோப்பையை வசப்படுத்தியதெல்லாம் காலத்திற்கும் நின்று பேசக்கூடிய சரித்திரமாகும்.

- Advertisement -

அப்போது “தோனி ஓய்வு பெற்ற பின் எப்படி ஃபீல்டிங் செய்வது என்பது பற்றி புத்தகம் எழுத வேண்டும்” என்று அவரை வளர்த்த சௌரவ் கங்குலி பாராட்டியதெல்லாம் மாணவனால் குரு பெருமையடைந்த தருணமாகும். அதைத் தொடர்ந்து 2011 உலகக் கோப்பையை வென்ற புத்துணர்ச்சியுடன் மீண்டும் ஐபிஎல் தொடரில் சொல்லி அடித்த தோனி சென்னைக்காக 2வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதல் கேப்டனாக வரலாறு படைத்தார். அதன் பின் 2012, 2013, 2015 ஆகிய வருடங்களில் மற்ற அணிகள் லீக் சுற்றை தொடுவதற்கே திண்டாடிய நிலையில் தோனி தலைமையில் கெத்தாக சென்னை ஃபைனல் வரை சென்றது.

ஆனால் அதற்குடுத்த 2 வருடங்களில் உரிமையாளர்கள் பெட்டிங் புகாரில் சிக்கியதால் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சிஎஸ்கே மீண்டும் 2018 சீசனில் தோனி தலைமையில் சொல்லி அடித்து 3வது கோப்பையை வென்று மாஸ் கம்பேக் கொடுத்தது. குறிப்பாக அந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட வயதை கொண்ட வீரர்களுடன் களமிறங்கியதால் “டாடி ஆர்மி எங்கே ஜெயிக்கப் போறாங்க” என்று கிண்டலடித்தவர்களின் கைகளாலேயே தோனியின் மஞ்சள் படை பாராட்டுகளை அள்ளியது.

- Advertisement -

அதன் பின் 2021இல் 4வது கோப்பையை வென்ற தோனி 2023இல் தன்னுடைய படைத்தளபதியான சுரேஷ் ரெய்னா இல்லாமலேயே முழங்கால் வலியையும் தாண்டி அபாரமான கேப்டன்ஷிப் செய்து 5வது கோப்பையை வென்றார். அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற சாதனை படைத்த அவர் சிஎஸ்கே அணியை பரம எதிரி மும்பைக்கு நிகராக வெற்றிகரமான அணியாக மாற்றி சென்னை ரசிகர்களை தலை நிமிர வைத்தார்.

அந்த வகையில் இதுவரை தோனி தலைமையில் 16 சீசன்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே 14 முறை ஆப் சுற்றுக்கு சென்று 10 முறை ஃபைனலுக்கு தகுதி பெற்று 5 கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் ஐபிஎல் என்பதே “சென்னையுடன் கோப்பையை வெல்வதற்கு மற்ற அணிகள் போட்டியிடும் தொடர்” என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஒருமுறை கலகலப்பாக பாராட்டினார். அந்தளவுக்கு கன்சிஸ்டென்சி எனும் வார்த்தைக்கு அடையாளமாக நிற்கும் சிஎஸ்கே அணி 2010, 2014 ஆகிய வருடங்களில் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் பெற்றுள்ளது.

- Advertisement -

அதன் வாயிலாக ரோகித் சர்மாவை மிஞ்சி டி20 கிரிக்கெட்டில் அதிக கோப்பைகளை வென்ற இந்திய கேப்டனாக தோனி சாதனை படைத்துள்ளார். அத்துடன் 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை (87 வெற்றிகள் – 55.06%) விட ஐபிஎல் தொடரில் அதிக வெற்றி சராசரியுடன் (133 வெற்றிகள் – 58.84%) மகத்தான கேப்டனாக தோனி உயரத்தில் மின்னுகிறார். இது போக ஷேன் வாட்சன், மொயின் அலி, சிவம் துபே, ரஹானே போன்ற வீரர்கள் ஆர்சிபி போன்ற மற்ற அணிகளில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டனர்.

ஆனால் அந்த வீரர்களும் தோனி தலைமையில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல உதவியது எப்படி என்பது இப்போதும் எதிரணி ரசிகர்களுக்கு ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது. அது போக ட்வயன் ப்ராவோ, டு பிளேசிஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய சர்வதேச கேரியரில் சிறந்து விளங்குவதற்கு தோனி உதவியதாக பலமுறை தெரிவித்துள்ளனர். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் தோனி பல போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மகத்தான ஃபினிஷர் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதையும் படிங்க: அதுல தோனியை விட பெஸ்ட்.. சச்சினை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்.. நவ்ஜோத் சித்து பாராட்டு

மொத்தத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்.எஸ். தோனி ஐபிஎல் எனும் விளையாட்டு காவியத்தில் காலத்தை கடந்த காவியத் தலைவனாக 41 வயதில் தனது அனுபவம், திறமை, ஃபிட்னஸ் மன உறுதியால் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார். அவரை தல என்று தலையில் வைத்து கொண்டாடுவதற்கு மீண்டும் தமிழக ரசிகர்களும் சிஎஸ்கே ரசிகர்களும் தயாராகியுள்ளது ஐபிஎல் 2024 தொடரின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

Advertisement