சாம் கரண், ஸ்டோக்ஸ் விடுங்க – ஐபிஎல் ஏலத்தில் அவங்க தான் பெரிய விலைக்கு போவாங்க, ரெய்னாவின் 3 வீரர்கள் இதோ

raina
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடை காலம் இந்தியாவிலேயே கோலகாலமாக நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த வருடம் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய புதிய அணிகள் உருவாக்கப்பட்டதால் அதற்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் 2018க்குப்பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் 2 நாட்கள் மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதனால் இம்முறை மினி அளவில் ஒருநாள் மட்டுமே நடைபெறும் இந்த ஏலத்தில் உலகம் முழுவதிலிருந்து 405 களமிறங்குகிறார்கள்.

Sam-Curran-CSK

- Advertisement -

பொதுவாகவே உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர அனுபவ வீரர்களாக இருந்தாலும் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போவது வழக்கமாகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்தின் சாம் கரன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பெரிய தொகைக்கு விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் மற்றும் பைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற சாம் கரண் அதிக தொகைக்கு விலை போகும் வீரராக இருப்பார் என்றும் நம்பப்படுகிறது.

3 தரமான வீரர்கள்:
இந்நிலையில் அவர்களை விட சமீபத்திய விஜய் ஹசாரே கோப்பையில் அதிரடியாக செயல்பட்டு 277 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்த தமிழக வீரர் நாராயன் ஜெகதீசன், 12 வருடங்கள் கழித்து போராடி இந்திய அணிகள் அபார கம்பேக் கொடுத்துள்ள ஜெயதேவ் உனட்கட், அயர்லாந்தின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டில் ஆகியோர் இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு விலை போவார்கள் என்று ரசிகர்களால் மிஸ்டர் ஐபிஎல் என்று கொண்டாடப்படும் முன்னாள் நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ஐபிஎல் 2023 ஏலத்துக்காக சிறப்பு வல்லுனராக பணியாற்றும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

Narayan Jagadeesan

“ஜெகதீசனிடம் நல்ல கிரிக்கெட் மூளை உள்ளது. மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படக்கூடிய அவர் போட்டியை கணக்கிட்டு கடைசி வரை பேட்டிங் செய்யும் திறமை பெற்றவர். தமிழ்நாட்டுக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள அவரை நாம் நிச்சயமாக இந்த ஏலத்தில் பார்க்கலாம். சாம் கரண் இங்கிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதே போல் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தை வழி நடத்துகிறார். எனவே அவர்களைப் போன்ற ஆல் ரவுண்டர்களை வாங்குவது உங்களது அணியை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை”

- Advertisement -

“அதே சமயம் ஜெயதேவ் உனட்கட் இருப்பதையும் நீங்கள் மறக்கக்கூடாது. அவர் இப்போது தான் விஜய் ஹசாரே கோப்பையை சமீபத்தில் வென்று ஐபிஎல் தொடரில் ஏராளமான அனுபவத்தை கொண்டுள்ளார். அதே போல் அயர்லாந்தில் இருந்து ஜோஸ் லிட்டிலை நீங்கள் பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறந்து விளங்கிய அவருடன் நானும் இணைந்து விளையாடியுள்ளேன்” என்று கூறினார்.

Raina-2

அவர் கூறுவது போல இதற்கு முன் நிலையற்ற வாய்ப்புகளை பெற்று சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய நாராயண் ஜெகதீசன் விஜய் ஹசாரே கோப்பையில் அடுத்தடுத்த உலக சாதனைகளை படைத்து தற்போது நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பையிலும் அதிரடியாக செயல்பட்டு உச்சகட்ட பார்மில் இருக்கிறார். அந்த வகையில் இந்தியரான அவரை வாங்குவதற்கு நிச்சயமாக சென்னை உட்பட பல அணிகள் போட்டி போடலாம். அத்துடன் பொதுவாகவே இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மவுசு அதிகம் என்பார்கள்.

இதையும் படிங்க: முதல் போட்டியில் தவறவிட்டதை இரண்டாவது போட்டியில் சாதித்து காட்டிய அஷ்வின் – செம கம்பேக் தான்

அதனாலேயே 2014க்குப்பின் சுமாராக செயல்பட்டும் ஜெயதேவ் உனட்கட் தொடர்ந்து பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு வருகிறார். ஆனால் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக அற்புதமான கம்பேக் கொடுத்துள்ள அவரது மதிப்பு மேலும் அதிகரித்துள்ளதால் நிச்சயம் இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு விலை போவார் என்று நம்பலாம். அதே போல் அயர்லாந்தின் ஜோஸ் லிட்டில் நடைபெற்று முடிந்த உலக கோப்பையில் 11 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் குறைந்த விலைக்கு வளைத்து போட அனைத்து அணிகளும் போட்டி போடும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement