முதல் போட்டியில் தவறவிட்டதை இரண்டாவது போட்டியில் சாதித்து காட்டிய அஷ்வின் – செம கம்பேக் தான்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இன்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்ற முனைப்பு காட்டுகிறது.

IND-vs-BAN

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கொன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்ய வங்கதேச அணியும் முனைப்பு காட்டுவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. அதன்படி இன்று டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 109 ரன்களை எடுத்துள்ளது.

Ashwin

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது போட்டியின் போது தமிழக வீரர் அஷ்வின் ஒரு விக்கெட்டை மட்டும் எடுத்திருந்தது பெரிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அஷ்வின் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார் என்பது ஏமாற்றத்தை அளித்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தின் முதலாவது இன்னிங்சில் மிகச் சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் அஷ்வின் 71 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க : கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஏதாவது திட்டிடப்போறேன். கே.எல் ராகுலை வெளுத்து வாங்கிய – சுனில் கவாஸ்கர்

முதலாவது போட்டியில் தவறவிட்ட தனது விக்கெட் வேட்டையை அவர் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தி காட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. அஷ்வின் இந்த நான்கு விக்கெட்டை வீழ்த்தியதோடு மட்டுமின்றி முதலாவது இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் பேட்டிங்கிலும் அவர் கை கொடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement