கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஏதாவது திட்டிடப்போறேன். கே.எல் ராகுலை வெளுத்து வாங்கிய – சுனில் கவாஸ்கர்

Sunil-Gavaskar-and-KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 22-ஆம் தேதி இன்று டாக்கா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்து தற்போது தங்களது முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. அதனை தொடர்ந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.

IND-vs-BAN

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் செய்த ஒரு தேர்வு பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங்கில் 40 ரன்களையும், பந்துவீச்சில் 8 விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்த குல்தீப் யாதவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக உனட்கட்டிற்கு வாய்ப்பு வழங்கினார்.

உனட்கட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது வரவேற்கக் கூடிய ஒன்று என்றாலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்தீப் யாதவை அணியில் இருந்து நீக்கியது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

Unadkat-and-Kuldeep

கடந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்ற ஒரு வீரரை இந்த போட்டியில் நீக்கியதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு வேறு கடினமான வார்த்தைகளை கூறி திட்ட வேண்டும் என்று இருக்கிறது. ஆனாலும் நான் அதனை கட்டுப்படுத்திக் கொண்டு டீசன்டாக இருக்கிறேன். ஒரு வீரர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த டெஸ்ட் போட்டியில் விழுந்த 20 விக்கெட்டுகளில் எட்டு விக்கெட்டுகளை தனி ஒருவராக கைப்பற்றிய வேளையில் அவரை இரண்டாவது போட்டியிலும் விளையாட வைத்திருக்க வேண்டும். அவரை இந்த போட்டியில் கழற்றிவிட்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சுனில் கவாஸ்கர் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அனுபவமில்லாத போதிலும் 2007இல் தோனியை கேப்டனாக பரிந்துரைத்தது ஏன்? பின்னணியை பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்

கவாஸ்கர் கூறியது போலவே ரசிகர்கள் பலரும் உனட்கட்டிற்கு வாய்ப்பு கொடுத்தது சரியான ஒன்றுதான் ஆனாலும் நீங்கள் குல்தீப் யாதவை நீக்கியதற்கு பதிலாக முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவையோ நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக உனட்கட்டிற்கு வாய்ப்பினை நீங்கள் வழங்கி இருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement