ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28 முதல் நடைபெற்று வருகிறது. ஐசிசி உலகக் கோப்பைகளுக்கு நிகரான தரத்துடன் நடைபெற்று வரும் அந்தத் தொடரில் கடந்த 17 வருடங்களில் சில பேட்ஸ்மேன்கள் மகத்தான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளனர். குறிப்பாக 2014 எலிமினேட்டரில் பஞ்சாப்பை அடித்து நொறுக்கிய சுரேஷ் ரெய்னா 25 பந்துகளில் 85 ரன்கள் குவித்தது ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றின் சிறந்த டாப் 5 இன்னிங்ஸ்களை சுரேஷ் ரெய்னா சமீபத்திய பேட்டியில் தேர்ந்தெடுத்துள்ளார். மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் அவர் அந்தப் பட்டியலில் தன்னுடைய 87 (25) ரன்கள் ஆட்டத்தை 5வது இடத்தில் தேர்ந்தெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக ரிங்கு சிங் அடித்த 63* (24) ரன்களை ரெய்னா 4வது இடத்தில் தேர்ந்தெடுத்துள்ளார்.
ரெய்னாவின் தேர்வுகள்:
அப்போட்டியில் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது கொல்கத்தா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது யாஷ் தயாளுக்கு எதிராக அடுத்தடுத்த 5 சிக்ஸர்களை அடித்த ரிங்கு சிங் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த இன்னிங்ஸ் ரெய்னாவின் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2010 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக எம்எஸ் தோனி 54* (29) ரன்கள் குவித்த இன்னிங்ஸ் அவரது பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. அந்த சீசனில் பிளே ஆஃப் செல்ல பஞ்சாப்புக்கு எதிரான கடைசிப் போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலையில் சென்னை களமிறங்கியது. அப்போது கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடிய தோனி அடுத்தடுத்த சிக்சர்களுடன் ஃபினிஷிங் செய்தார்.
டாப் 5 இன்னிங்ஸ்:
அதன் காரணமாக பிளே ஆஃப் சென்ற சென்னை இறுதியில் தங்களுடைய முதல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. அதன் பின் 2016 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக விராட் கோலி அடித்த 113 (50) ரன்களை ரெய்னா 2வது சிறந்த ஆட்டமாக தேர்ந்தெடுத்துள்ளார். மழையால் 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் கையில் தையல்களை போட்டுக்கொண்டு விராட் கோலி பெங்களூருவுக்கு சதமடித்து பெற்றுக் கொடுத்த வெற்றியை மறக்கவே முடியாது.
இதையும் படிங்க: உள்ளூர் கிரிக்கெட்டில் தெரியாத இந்த 3 விஷயங்களை கேப்டன் ரோஹித்திடம் கத்துக்கிட்டேன்.. ஜெய்ஸ்வால் பேட்டி
இறுதியில் 2013 ஐபிஎல் தொடரில் புனேவுக்கு எதிராக கிறிஸ் கெயில் அடித்து நொறுக்கிய 175* (66) ரன்கள் இன்னிங்ஸ் ரெய்னாவின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அன்றைய நாளில் பெங்களூரு அணிக்காக சூறாவளியாக விளையாடிய கிறிஸ் கெயில் அதிவேக சதம், அதிகபட்ச ஸ்கோர் போன்ற உலக சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது.