
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அதற்காக சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதைத்தொடர்ந்து 2013க்குப்பின் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் விளையாட உள்ளது.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்கு தகுதியான தம்முடைய 11 பேர் கொண்ட இந்திய அணியை 2013 வெற்றியாளர் மற்றும் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுத்துள்ளார். இந்தத் தொடரில் குல்தீப் யாதவ் இந்தியாவின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக இருப்பார் என்று ரெய்னா கூறியுள்ளார். மேலும் ஷமியை அவர் தன்னுடைய அணியில் தேர்ந்தெடுக்காமல் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சுரேஷ் ரெய்னா பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் நம்முடைய அணிக்கு மிகவும் முக்கியமானவராக இருக்கப் போகிறார். ஏனெனில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் மிடில் ஓவர்களை பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீசுவார்கள். பின்னர் குல்தீப் யாதவ் தனது மாயாஜால சுழலைக் கொண்டு வருவார்”
“குறிப்பாக ஸ்வீப் ஷாட்டுகளை நன்றாக அடிக்கக்கூடிய ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் அசத்துவார். நியூசிலாந்து அணியில் நிறைய இடது கை வீரர்கள் இருக்கிறார்கள். எனவே குல்தீப் அவர்களுக்கு எதிராக அழுத்தத்தை உண்டாக்கி பெரிய ஷாட்டை அடிக்க வைத்து விக்கெட்டுகளை எடுப்பார். ஹர்ஷித் ராணா நல்ல ஃபார்மில் இருக்கிறார்”
“வேரியசன் ஸ்லோ பவுன்சர்களை வீசக்கூடிய அவரால் ஸ்விங் செய்ய முடியும். ஹர்திக் பாண்டியா மிகவும் முக்கியமான வேலை செய்வார்” எனக் கூறினார். அந்த வகையில் காயத்திலிருந்து குணமடைந்த ஷமி முழுமையான ஃபார்மில் இல்லாததால் ராணா, அர்ஷ்தீப் ஆகிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களை ரெய்னா தன்னுடைய அணியில் தேர்வு செய்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட்டை அவர் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயர் மீது எந்த சந்தேகமும் கிடையாது.. அவர் அந்த இடத்தில் தான் விளையாடுவார் – கவுதம் கம்பீர்
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான சுரேஷ் ரெய்னாவின் இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கீப்பர்), அக்சர் படேல், ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ்