43 வயதிலும் உழைக்கும் தல தோனி மேல அந்த பழி போடாதீங்க.. சிஎஸ்கேவை அவங்க வாங்குறாங்க.. ரெய்னா பேட்டி

Suresh Raina 3
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை 99% இழந்துள்ளது. இந்த வருடம் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது. பொதுவாகவே அதிரடியாக விளையாடி தொடர் வெற்றிகளை பெறுவதற்கு பெயர் போன சென்னை இம்முறை அதற்கு நேர்மாறாக போராடாமலேயே தோல்வியை சந்திக்கிறது.

இம்முறை அந்த அணியில் பேட்டிங், ஃபீல்டிங், பௌலிங் ஆகிய எதுவுமே நன்றாக இல்லாததே அதற்கு காரணமாகிறது. இப்படிப்பட்ட அணியை 2025 ஐபிஎல் ஏலத்தில் தோனி வாங்கலாமா? என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் சிஎஸ்கே அணியை தோனி தான் ஏலத்தில் வாங்குவார் என்பது உண்மையல்ல என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

உண்மையை உடைத்த ரெய்னா:

உண்மையில் தோனி ஏலத்தில் ஓரிரு வீரர்களைத் தவிர்த்து மொத்த அணியையும் வாங்குவதற்கான அழைப்புகளை கொடுக்க மாட்டார் என்று ரெய்னா கூறியுள்ளார். எனவே 43 வயதிலும் சிஎஸ்கே வெற்றிக்காக போராடும் தோனி மீது பழி போட வேண்டாம் என்று ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ரெய்னா பேசியது பின்வருமாறு.

“காசி விஸ்வநாதன் சார் 30 – 40 வருடங்களாக நிர்வகித்து வருகிறார். ரூபா மேம் சிஎஸ்கே அணி நிர்வாகம், வீரர்களை வாங்குவது, முக்கிய வீரர்களை தக்க வைப்பது போன்ற முடிவுகளை எடுப்பவர். ஆனால் இம்முறை வாங்கப்பட்ட வீரர்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்பதை அனைவரும் அறிவோம். தோனி தான் இறுதி முடிவை எடுப்பார் என்று அனைவரும் சொல்கிறார்கள்”

- Advertisement -

உழைக்கும் தோனி:

“ஆனால் நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நான் ஏலத்தில் கலந்து கொண்டதில்லை. விவாதத்திலும் இருந்ததில்லை. தக்க வைக்கும் வீரர்கள் பற்றி மட்டுமே நான் பேசியிருக்கிறேன். ஒரு வீரரை வாங்கலாமா? வேண்டாமா? என்ற முடிவு பற்றி தோனிக்கு அழைப்பு வரலாம். ஆனால் தோனி அதில் ஈடுபடுவதில்லை. சிஎஸ்கே அணியின் கரு உறுப்பினர்களே ஏலத்தில் பங்கேற்று அனைத்தையும் கையாளுவார்கள்”

இதையும் படிங்க: கவலைப்படாதீங்க சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல கடைசியா இந்த வாய்ப்பிருக்கு.. மெடிக்கல் மிரக்கிள் நிகழுமா?

“நீங்களே நினைத்துப் பாருங்கள். தோனி இது போன்ற அணியை ஏலத்தில் வாங்குவாரா? அவர் 4 – 5 முக்கியமான வீரர்களின் பெயரைச் சொல்வார். அதில் சிலர் தக்க வைக்கப்படுவார்கள் அவ்வளவு தான். 43 வயதிலும் அன்கேப்ட் கேப்டனாக தோனி கடினமாக உழைத்து தன்னுடைய சிறந்த அனைத்தையும் கொடுக்கிறார். அவர் தன்னுடைய பிராண்ட், பெயர், ரசிகர்களுக்காக முயற்சி எடுத்து விளையாடி வருகிறார். ஆனால் மற்ற 10 வீரர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கூறினார்.

Advertisement