கவலைப்படாதீங்க சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல கடைசியா இந்த வாய்ப்பிருக்கு.. மெடிக்கல் மிரக்கிள் நிகழுமா?

CSK Team
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறி விட்டதாக எதிரணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்தனர். ஏனெனில் 18 வருட ஐபிஎல் தொடரில் சென்னை 15 வருடம் விளையாடி 11 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் நிறைய எதிரணிகளை தோற்கடித்த சென்னை 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது.

அப்படிப்பட்ட சென்னை அணி யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இம்முறை ஆரம்பம் முதலே மோசமாக விளையாடி வருகிறது. குறிப்பாக பேட்டிங் துறையில் 180 ரன்கள் கூட தொட முடியாமல் சிஎஸ்கே திணறி வருகிறது. அதனால் இதுவரை 9 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள சென்னை 7 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.

- Advertisement -

கடைசி வாய்ப்பு:

அதன் காரணமாக புள்ளிபட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை 99% இழந்துள்ளது. அதனால் ஆர்சிபி, மும்பை உள்ளிட்ட எதிரணி ரசிகர்கள் சிஎஸ்கே அணி வீட்டுக்கு செல்லப் போவதை நினைத்து சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். மறுபுறம் சிஎஸ்கே ரசிகர்கள் மிகப்பெரிய சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்போதும் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல உறுதியற்ற வாய்ப்பிருக்கிறது. அதற்கு முதலில் எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் சென்னை வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வென்றால் அந்த அணி 14 புள்ளிகளை பெறும். மேலும் சிஎஸ்கே அணியின் தற்போதைய ரன் ரேட் (-1.302) மிகவும் மோசமாக இருக்கிறது.

- Advertisement -

மெடிக்கல் மிராக்கிள்:

எனவே அந்த 5 வெற்றிகளையும் சென்னை அணி முடிந்தளவுக்கு கொஞ்சம் பெரிதாக பெற்று ரன்ரேட்டை நேர்மறையாக மாற்ற வேண்டும். அவ்வாறு நடந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை செல்ல 50 – 50% வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெற்றது.

இதையும் படிங்க: சிஎஸ்கே அந்த மிருகத்திடம் சிக்கிடுச்சு.. தோல்விக்கு இதான் காரணம்.. கம்பேக் வெகு தூரமில்லை.. பிளெமிங் பேட்டி

இருப்பினும் ரன் ரேட் காரணமாக நூலிலையில் சென்னையை பின்னுக்குத் தள்ளிய பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. அதுவே 10 அணிகள் விளையாடிய ஐபிஎல் தொடரில் 14 புள்ளிகளுடன் ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த முதல் தருணமாகும். அதே போல மேஜிக் நிகழ்த்த சிஎஸ்கே அணிக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதுவரை வெளிப்படுத்திய ஆட்டத்தை வைத்துப் பார்க்கையில் சிஎஸ்கே அணி அந்த மேஜிக்கை நிகழ்த்துமா? என்பது கேள்வியாகும். அதையும் தாண்டி சிஎஸ்கே மெடிக்கல் மிராக்கிள் போன்ற சாதனையை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement