- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியின் சிக்ஸருக்கு அப்றம் தான்.. அவருக்காக இந்தியா 2011 உ.கோ ஜெய்ச்சுது.. கம்பீர் கருத்துக்கு ரெய்னா பதிலடி

இந்திய கிரிக்கெட் அணி 1983க்குப்பின் கடைசியாக 2011 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றிய நிலையில் இறுதிப்போட்டியில் கௌதம் கம்பீர் 97 ரன்கள் அடித்து அசத்தினார். அதே போல முக்கிய நேரத்தில் ஃபார்முக்கு வந்த கேப்டன் தோனி 91* ரன்கள் அடித்து சிக்சருடன் ஃபினிஷிங் செய்தார்.

அதன் காரணமாக இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. அதனாலேயே 2011 உலகக் கோப்பையை நினைப்பவர்களுக்கு முதலாவதாக தோனி சிக்ஸருடன் ஃபினிஷிங் செய்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது நினைவுக்கு வரும். அதனால் 2011 உலகக் கோப்பை வெற்றிக்காக கௌதம் கம்பீரை விட தோனி அதிகப்படியான பாராட்டுகளைப் பெற்றார்.

- Advertisement -

சிக்ஸருக்கு அப்றம் தானே ஜெய்ச்சோம்:

அதனால் அதிருப்தியடைந்த கௌதம் கம்பீர் 2011 உலகக் கோப்பையை ஒருவர் வென்று கொடுக்கவில்லை, ஒரு சிக்ஸரால் வெல்லவில்லை என்று தோனியை பற்றி கடந்த வருடங்களில் பலமுறை விமர்சித்துள்ளார். இத்தனைக்கும் 2011 உலகக் கோப்பையை நான் மட்டுமே வென்று கொடுத்தேன் என்று எங்கேயும் தோனி சொன்னதில்லை. இந்நிலையில் ஃபைனலில் தோனி அடித்த சிக்ஸருக்கு பின்பே இந்தியா உலகக் கோப்பை வென்றதாக கௌதம் கம்பீர் கருத்துக்கு சுரேஷ் ரெய்னா பதிலடி கொடுத்துள்ளார்.

உண்மையில் அந்த உலகக் கோப்பையை இந்தியா மற்றும் சச்சினுக்காகவே வெல்ல விரும்பியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த சிக்ஸருக்கு பின்பு தான் நாம் கோப்பையை வென்றோம் என்பது அனைவருக்கும் தெரியும். யார் என்ன சொன்னாலும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது என்பதே உண்மை”

- Advertisement -

ரெய்னா பதிலடி:

“அந்த உலகக் கோப்பை இந்தியாவுக்காகவும் 6 முறை போராடி தோல்வியை சந்தித்த சச்சின் பாஜிக்காகவும் வென்றோம் என்பதை அனைத்து இந்திய வீரர்களும் அறிவார்கள். அந்த உலகக்கோப்பை எங்களுடைய பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்கள், மசாஜ் செய்பவர்கள், அணி மருத்துவர்கள், கேப்டன், துணைக் கேப்டன், எங்களுடைய சிறு வயது பயிற்சியாளர்கள் உட்பட அனைவருக்குமானது”

இதையும் படிங்க: தோனி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 3 ஆவது இந்திய கேப்டனாக சூரியகுமார் யாதவ் – அடையவுள்ள பெருமை

“அந்த மொத்த தொடருமே நன்றாக இருந்தது. குறிப்பாக யுவ்ராஜ் சிங் செயல்பாடுகளால் நாம் உலகக் கோப்பையை வென்றோம் என்று நினைக்கிறேன். அவர் பேட்டிங், ஃபீல்டிங் செய்த விதம் போலவே நிறைய விக்கெட்டுகளை எடுத்து எங்களுடைய வெற்றிகளில் பங்காற்றினார். பின்பு தான் அவருக்கு புற்றுநோய் இருந்தது என்பது எங்களுக்குத் தெரிய வந்தது. அதையும் தாண்டி விளையாடி தொடர்நாயகன் விருது வென்ற அவருக்கு தலை வணங்குகிறோம்” என்று கூறினார்.

- Advertisement -