ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் திண்டாடி வருகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்த சென்னை அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 5 தொடர் தோல்விகளை சந்தித்தது. அதன் பின் தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிராக வென்ற சென்னை தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மும்பைக்கு எதிரான போட்டியில் மீண்டும் சொதப்பிய சென்னை போராடாமலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல எஞ்சிய 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. ஆனால் தற்போது விளையாடும் விதத்திற்கு சென்னை அணி இங்கிருந்து பிளே ஆஃப் செல்லாது என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.
ரெய்னா வேதனை:
இந்நிலையில் தங்களுடைய காலத்தில் சிஎஸ்கே அணி அதிக டாட் பந்துகளை எதிர்கொள்ளாமல் ஸ்ட்ரைக்கை மாற்றி அடித்து விளையாடுவோம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய அணி ஸ்ட்ரைக்கை மாற்றி சிங்கிள் எடுக்கவே தடுமாறுவதாக ரெய்னா ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் வெற்றிக்காக போராடும் பசி, நோக்கம் இல்லையென்றும் ரெய்னா வேதனை தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக இந்தத் தொடரில் சிஎஸ்கே மிகவும் பலவீனமான அணியாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் பிளே ஆஃப் செல்வது கடினம் என்றும் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெய்னா பேசியது பின்ருமாறு. “ஆம் சிஎஸ்கே இந்த வருடத்தில் இருக்கும் அணிகளில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அங்கே எந்த நோக்கமும் இல்லை என்று நினைக்கிறேன்”
எப்படி இருந்த சிஎஸ்கே:
“வெற்றிப் பெறுவதற்கான பசி அங்கே இல்லை. இங்கே நான் யாரையும் மரியாதைக் குறைவாக சொல்லவில்லை. ஆனால் சிஎஸ்கே அணிக்காக நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டின் பிராண்ட் தற்போதைய அணியில் இல்லை. குறிப்பாக சென்னையில் விளையாடும் போது நாங்கள் அதிகம் டாட் பந்துகளை எதிர்கொள்ள மாட்டோம். ஸ்ட்ரைக்கை மாற்றி மாற்றி விளையாடுவதே வெற்றியைக் கொடுக்கும்”
இதையும் படிங்க: அவங்க பாத்து திருந்துங்க.. 2010, 2011 மாதிரி சிஎஸ்கே ஜெய்க்க தமிழ்நாட்டு பிளேயர்ஸ் வேணும்.. ரெய்னா அட்வைஸ்
“நாங்கள் அடிப்படையான கிரிக்கெட்டை விளையாடினோம். முதல் 6 ஓவர்களில் நாங்கள் அதிரடியான நோக்கத்துடன் விளையாடினோம். டெத் ஓவர்களில் எம்எஸ் தோனி, அல்பி மோர்கல் ஆகியோர் அடித்து நொறுக்குவார்கள். அவர்கள் எடுப்பது சிறிய ரன்களாக இருந்தாலும் அதை அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசுவார்கள். இது போன்ற விஷயங்களை செய்து தான் நாங்கள் சிஎஸ்கே அணிக்காக வெற்றிகளைப் பெற்றோம் என்று கூறினார்.



