சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற ஜடேஜா இருக்காரு.. அந்த 3 பேரும் சேந்து 16 ஓவரில் முடிச்சுருவாங்க.. சிஎஸ்கே பலம் பற்றி ரெய்னா

Suresh Raina 2
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 பிரீமியர் லீக் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய 6வது கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகிறது. தோனிக்கு பின் கடந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ருதுராஜ் தலைமையில் தடுமாற்றமாக விளையாடிய சென்னை 5வது இடத்தைப் பிடித்து நூலிலையில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தவற விட்டது.

எனவே இம்முறை பிளே ஆஃப் சுற்றை கடந்து 6வது கோப்பையை வென்று தோனியை வெற்றிகரமாக வழி அனுப்பும் லட்சியத்துடன் சென்னை களமிறங்க உள்ளது. இந்த வருடம் அந்த அணிக்காக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட உள்ளது பலமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் சென்னையில் பிறந்து வளர்ந்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

சென்னையின் பலம்:

2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை சென்னை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவருக்கு சேப்பாக்கம் மைதானத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். எனவே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அஸ்வின் தமது சொந்த ஊரான சென்னைக்கு கோப்பையை வெல்ல முழுமூச்சுடன் விளையாடுவார் என்று நம்பலாம்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் ஆப்கானிஸ்தானின் இளம் ஸ்பின்னர் நூர் அஹ்மத் சிஎஸ்கே அணிக்காக சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது பலம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிராக எதிரணியினர் சென்னையில் தடுமாறுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சின்னத் தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ரெய்னா நம்பிக்கை:

“ஜடேஜா சாம்பியன்ஸ் டிராபியை வென்று வந்துள்ளார். அஸ்வின் லோக்கல் பையன். உள்ளூரில் சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடம் அவர் ஏராளமான ஆதரவைப் பெறுவார். சிஎஸ்கே அணியுடன் தனது கேரியரை வலுவாக முடிக்க அஸ்வின் விரும்புவார். வலுவான குணத்தைக் கொண்ட அவர் பவர்பிளே, மிடில் ஓவர்களில் பௌலிங் செய்யும் திறமைக் கொண்டவர்”

இதையும் படிங்க: ஃபிட்னெஸை விட இதான் சீக்ரெட்.. 43 வயசானாலும் தோனி இதை செய்வாரு.. ஹெலிகாப்டர் பறக்கும்.. ரெய்னா

“அவருடன் ஜடேஜா, நூர் அஹ்மத் ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து 12 தரமான ஸ்பின் ஓவர்களை வீசுவார்கள். கூடவே பதிரனா இருக்கிறார். அவர் 4 ஓவர்களை வீசுவார். அந்த வகையில் 16 ஓவர்கள் முடிந்து விடும். எனவே எதிரணியினர் சிஎஸ்கே அணியை நன்றாக எதிர்கொள்ள தடுமாறுவார்கள். ஜடேஜா, அஸ்வின், நூர் ஆகியோர் நிறைய தரத்தைக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு எதிராக வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். அஸ்வின், ஜடேஜா ஏற்படுத்தும் அழுத்தத்தைப் பயன்படுத்தி நூர் விக்கெட்டுகளை எடுப்பார்” என்று கூறினார்.

Advertisement