ஃபிட்னெஸை விட இதான் சீக்ரெட்.. 43 வயசானாலும் தோனி இதை செய்வாரு.. ஹெலிகாப்டர் பறக்கும்.. ரெய்னா

Suresh Raina
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் எம்எஸ் தோனி விளையாட உள்ளது ரசிகர்களிடம் வழக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 43 வயதாகும் அவர் பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே களமிறங்கி வருகிறார்.

ஆனால் அந்த வாய்ப்பிலும் கடந்த வருடம் அதிரடியான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்ட தோனி வயதானலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்தார். கடந்த வருடம் 11 இன்னிங்ஸில் 161 ரன்களை 220.54 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தோனி வெளுத்து வாங்கினார். அதே போல இந்த வருடமும் அசத்துவதற்காக அவர் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

- Advertisement -

தோனியின் சீக்ரெட்:

அங்கே மதிசா பதிரனாவுக்கு எதிராக அவர் பறக்க விட்ட ஹெலிகாப்டர் சிக்ஸர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக தோனி 43 வயதிலும் சிறப்பாக விளையாடுவதற்கு அவருடைய ஃபிட்னஸ் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதை விட பேட் ஃலிப்ட் அதாவது பேட்டை தூக்கி சுழற்றும் விதமே தோனி அதிரடியாக விளையாடுவதன் ரகசியம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

அதைப் பின்பற்றி இந்த வருடமும் தோனி சிறந்த ஃபினிஷராக செயல்படுவார் என்று தெரிவிக்கும் சின்னத் தல ரெய்னா இது பற்றி பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்கிறேன். அனைவரும் தோனியின் ஃ பிட்னஸ், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஷிப் திறன் பற்றி பேசுகிறார்கள். ஆனால் பேட்டை சுழற்றுவதன் வாயிலாக அவர் எவ்வளவு சக்தியை உருவாக்குகிறார் என்பதை யாரும் கவனிப்பதில்லை”

- Advertisement -

தல ஹெலிகாப்டர்:

“அவர் ஐபிஎல் துவங்க ஒரு மாதம் முன்பாகவே சென்னை சென்று விடுவார். இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக நான் விளையாடிய போது நாங்கள் முன்னதாகவே சென்னைக்கு சென்று ஒவ்வொரு வாரமும் 4 – 5 நாட்கள் 3 – 4 மணி நேரங்கள் பயிற்சிகளை எடுப்போம். கடினமான பிட்ச்சில் ஸ்பின்னர்களை எதிர்கொண்டுப் பயிற்சிகளை எடுப்போம். கடந்த வருடம் தோனி சிக்ஸர்களை அடித்தார்”

இதையும் படிங்க: இத்தனை கோடிகளா? சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற இந்திய அணிக்கு மெகா பரிசை அறிவித்த பிசிசிஐ.. ஐசிசி விட 3 மடங்கு

“இந்த வருடமும் வலுவாக இருக்கும் அவர் சிஎஸ்கே அணிக்காக அசத்துவதற்கு திடமாக காத்திருக்கிறார். சிஎஸ்கே அணி பேட்டிங்கில் 1 முதல் 6 வரை வலுவாக இருக்கிறது. இந்த வருடமும் நாம் தல தோனியின் ஹெலிகாப்டர்களை பார்ப்போம் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக அவர் ஃபினிஷர் வேலையைச் செய்வார். அதற்கான திட்டங்களை வகுத்துள்ள அவர் இந்த தொடரின் வயதான வீரர். ஆனால் அவர் தனது மனதிற்குள் வித்தியாசமான விஷயங்களை வைத்திருக்கிறார். அவருடைய ஃபிட்னஸ் உச்சமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement