IPL 2023 : ரெய்னா தான் என்னோட இன்ஷ்பைரேசன், நீங்க நினைக்கிற மாதிரி நான் அதுக்காக செல்பிஷா விளையாடல – ருதுராஜ் பேட்டி

Ruturaj Gaikwad Raina
- Advertisement -

ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் லக்னோ அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலிலும் 6வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 217/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கைக்வாட் 57 (31) டேவோன் கான்வே 47 (29) சிவம் துபே 27 (16) ராயுடு 27* (14) தோனி 12 (3) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்க் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Ruturaj Conway

- Advertisement -

அதை தொடர்ந்து 218 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கெயில்ஸ் மேயர்ஸ் ஆரம்பத்திலேயே சரமாரியாக அடித்து நொறுக்கி 8 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (22) ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்த போது அவுட்டாக்கிய மொய்ன் அலி அடுத்த சில ஓவர்களில் கேஎல் ராகுல் 20, க்ருனால் பாண்டியா 9, மார்கஸ் ஸ்டோனிஸ் 21 என இதர வீரர்களையும் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி அசத்தினார். அதனால் 20 ஓவரில் 205/7 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ போராடி தோற்றது.

ரெய்னா இன்ஸ்பைரேஷன்:
முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் 92 ரன்கள் குவித்தும் இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வி கிடைத்த நிலையில் இப்போட்டியில் 57 (31) ரன்களை விளாசிய ருதுராஜ் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். கடந்த சீசன்களில் முதல் 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சற்று அதிக பவுண்டரிகளை மட்டுமே அடித்து வந்த அவர் இந்த சீசனில் வழக்கத்துக்கு மாறாக பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்களை பறக்க விட்டு 149* ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் ஆரம்ப தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.

Ruturaj

அதனால் 2021 சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பையை வெல்ல உதவிய அவர் இந்த சீசனிலும் 5வது கோப்பை வெல்ல உதவுவாரா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எதிரணி ரசிகர்கள் இவர் ஆரஞ்சு தொப்பிக்காக விளையாடுவதாக சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஆரஞ்சு தொப்பிக்காக விளையாடவில்லை என்று தெரிவிக்கும் ருதுராஜ் கைக்வாட் கடந்த சீசனில் 9வது இடத்தைப் பிடித்த காரணத்தால் இந்த வருடம் ஒவ்வொரு போட்டிலும் அதிரடியான தொடக்கத்தை கொடுக்கும் எண்ணத்துடனேயே விளையாடி வருவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் சுரேஷ் ரெய்னா போல சென்னைக்கு தொடர்ந்து பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்பதே தம்முடைய நோக்கம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டி முடிவில் பேசியது பின்வருமாறு. “சுரேஷ் ரெய்னா எனக்கு உத்வேகத்தை கொடுப்பவர். சென்னை அணிக்காக அவரைப் போல் நான் தொடர்ந்து சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஆரஞ்சு கோப்பை அல்லது எதையும் எதிர்பார்க்கவில்லை. மாறாக அணியின் வெற்றியில் பங்காற்ற விரும்புகிறேன். குறிப்பாக கடந்த வருடம் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் இம்முறை வெற்றிக்கு ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த தொடக்கம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது”

Ruturaj

“அதற்கு டோவோன் கான்வே மிகவும் உதவி செய்கிறார். அதனால் கடந்து 2 போட்டிகளில் எங்களால் நல்ல தொடக்கத்தை பெற முடிந்தது. இதே போல வரும் போட்டிகளிலும் தொடர்ந்து செயல்படுவேன் என்று நம்புகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : 9 வருசத்துல 5 கப் வாங்கியும் எங்களால அதை மட்டும் சாதிக்க முடில – கடுப்பில் மும்பை கோச் ஷேன் பாண்ட் புலம்பல் பேட்டி

முன்னதாக 635 ரன்களை குவித்த 2021 சீசனில் கூட 130+ ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே விளையாடிய ருதுராஜ் இம்முறை 180க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடி வருகிறார். இதிலிருந்தே ஆரஞ்சு தொப்பியை வெல்ல வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் தடவலாக செயல்படாமல் அணியின் நலனுக்காக ருதுராஜ் அதிரடியாக விளையாடுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

Advertisement