IPL 2023 : 9 வருசத்துல 5 கப் வாங்கியும் எங்களால அதை மட்டும் சாதிக்க முடில – கடுப்பில் மும்பை கோச் ஷேன் பாண்ட் புலம்பல் பேட்டி

bond
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அதனால் இந்த வருடம் மிகச் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள அந்த அணி பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த மும்பை ரோஹித் சர்மா, இசான் கிசான், சூரியகுமார் யாதவ் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடவலாக செயல்பட்டு சொற்ப ரன்களில் அவுட்டானதால் 48/4 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.

Kohli

- Advertisement -

நல்ல வேளையாக இளம் வீரர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி 84* ரன்கள் குவித்து காப்பாற்றினார். ஆனால் 172 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு 148 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கிய கேப்டன் டு பிளேஸிஸ் 74 (43) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 82* (49) ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். இதனால் தொடர்ந்து 11வது முறையாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை தோல்வியை பதிவு செய்து மீண்டும் பரிதாபத்தை சந்தித்துள்ளது.

கடுப்பில் ஷேன் பாண்ட்:
கடைசியாக கடந்த 2012 சீசனில் தன்னுடைய முதல் போட்டியில் சென்னையை தோற்கடித்திருந்த அந்த அணி அதன் பின் கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து வருகிறது. ஆனாலும் அந்த காலகட்டங்களில் 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய சீசன்களில் கோப்பைகளை வென்ற மும்பை வெற்றிகரமான அணியாகவும் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் இம்முறையும் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளதால் தங்களது அணி 6வது கோப்பையை வெல்லப் போவது உறுதியென்று மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கெத்தாக பேசி வருகிறார்கள்.

RCB vs MI

ஆனாலும் அந்த 11 சீசன்களில் கோப்பையை வென்ற வருடங்களை தவிர்த்து மும்பை சற்று சுமாராகவே செயல்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வருடம் இப்படி பேசியே அந்த அணி முதல் கோணம் முற்றிலும் கோணம் என்பது போல் 6 தொடர் தோல்விகளை சந்தித்து அவமானத்திற்குள்ளானது. இந்நிலையில் கடந்த 9 வருடங்களாக மும்பையின் பயிற்சியாளராக செயல்பட்டு 5 கோப்பைகளை வென்றும் முதல் போட்டியில் மட்டும் வெல்ல முடியாமல் தவிப்பது ஏமாற்றத்தையும் விரக்தியையும் கொடுப்பதாக அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இது மும்பையுடன் என்னுடைய 9வது சீசனாகும். ஆனால் அவற்றில் ஓப்பனிங் போட்டியை மட்டும் எங்களால் வெல்ல முடியவில்லை என்பதை நினைக்கும் போது கடுப்பாகிறது. நாளின் முடிவில் இது மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. எப்போதுமே தோல்விகளை விட வெற்றி அதிகமாக இருப்பது நல்லதாகும். ஆனால் முதல் போட்டியிலேயே தோல்வியுடன் தொடரை துவக்குவது மிகவும் கடினமானதாகும். முதல் 3 ஓவர்களில் சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக பவுன்சர்களை சிறப்பாக பிரயோகித்த அவர் எங்களை அடிப்பதற்கு விடவில்லை”

“அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை விட்டு விட்டோம். மேலும் பெங்களூரு போன்ற சிறிய கிரிக்கெட் மைதானத்தில் பவர் பிளே முடிவில் 29/1 என்ற நிலையில் இருந்தும் நாங்கள் 170 ரன்கள் எடுக்க முயற்சித்தோம். இருப்பினும் பெங்களூரு அணியின் ஓப்பனிங் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. திலக் வர்மா எங்களுக்காக மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தும் அவருக்கு உறுதுணையாக வேறு யாரும் செயல்படவில்லை”

இதையும் படிங்க:CSK vs LSG : சேப்பாக்கம் சி.எஸ்.கே வின் கோட்டைன்னு சொல்றது என்னது சும்மாவா? – சி.எஸ்.கே செய்த சம்பவம்

“சின்னசாமி போன்ற சிறிய மைதானத்தில் 170 என்பது மிகவும் குறைவான இலக்காகும். இங்கே 190 ரன்கள் எடுத்தால் தான் வெற்றிக்கு போராட முடியும். அதே போல் என்னுடைய பவுலிங் எதிரணியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத அளவுக்கு சுமாராகவே இருந்தது” என்று கூறினார்.

Advertisement