CSK vs LSG : சேப்பாக்கம் சி.எஸ்.கே வின் கோட்டைன்னு சொல்றது என்னது சும்மாவா? – சி.எஸ்.கே செய்த சம்பவம்

Dhoni
- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி கடைசி போட்டியில் விளையாடியிருந்தது. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தப் போட்டியை கான சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருந்தனர்.

Moeen Ali 1

- Advertisement -

அதுமட்டும் இன்றி சிஎஸ்கே அணியின் கோட்டையாக பார்க்கப்படும் சேப்பாக்கத்தில் இந்த போட்டி நடைபெற்றதால் நேற்று நிரம்பி வழிந்த ஸ்டேடியத்தின் மொத்த ஆதரவும் சிஎஸ்கே அணிக்கு கிடைத்தது. ஒவ்வொரு பந்திற்கும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஸ்டேடியத்தை அதிரவிட்டனர் என்று கூறலாம். அந்த அளவிற்கு பலத்த ஆரவாரத்தை ரசிகர்கள் ஏற்படுத்தி இருந்தனர். அதன்படி நேற்று நடைபெற்ற முடிந்த இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 217 ரன்களை குவித்தது.

பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே குவித்ததால் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ruturaj

இவ்வேளையில் சென்னையில் நிச்சயம் தொடர்ச்சியாக சிஎஸ்கே அணி வெற்றி பெறும் என்பதனால் பிளேஆப் சுற்றின் வாய்ப்பு தற்போதே உறுதி என்று கூறலாம். அந்த அளவிற்கு சென்னை மைதானத்தில் சிஎஸ்கே அணியானது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் சேப்பாக்கம் தான் சிஎஸ்கே அணியின் கோட்டையை என்பதை மீண்டும் நிரூபிக்கும் படி ஒரு அசத்தலான சாதனையையும் சிஎஸ்கே அணி நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியானது பவர்பிளே அதாவது முதல் ஆறு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்து அசத்தியது. இதற்கு முன்னதாக சென்னை அணி 2014-ஆம் ஆண்டு பவர் பிளே ஓவர்களில் 100 ரன்களை அடித்ததே இதுவரை அதிகபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது.

இதையும் படிங்க : வீடியோ : சிக்ஸர் அடிப்பதில் இரு மடங்கு முன்னேற்றம் – ஆரஞ்சு தொப்பியுடன் சேப்பாக்கத்தில் நின்ற காரை பதம் பார்த்த ருதுராஜ்

அதேபோன்று மும்பையில் 2015-ஆம் ஆண்டு பவர்பிளே ஓவர்களில் 90 ரன்களை குவித்திருந்தது. ஆனால் சேப்பாக்கத்தில் நேற்று அடித்த இந்த 79 ரன் தான் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு பவர்பிளே-வில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி 75 ரன்கள் எடுத்திருந்தது தான் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement