இப்போ தான் நல்ல காம்பினேஷன் அமைஞ்சுருக்கு.. இதை கலைச்சுறாதீஙக.. ரோஹித்துக்கு ரெய்னா கோரிக்கை

Suresh Raina 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் பிடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து டார்ல் மிட்சேல் 130, ரச்சின் ரவீந்திரா 75 ரன்கள் எடுத்த உதவியுடன் 274 ரன்களை வெற்றி இலக்காக நினைத்தது.

அதை இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 46, விராட் கோலி 95, ரவீந்திர ஜடேஜா 39 ரன்கள் எடுத்து 48 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை காட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ரெய்னா கோரிக்கை:
சொல்லப்போனால் ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறியதால் இப்போட்டியில் வெல்ல முடியுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் காணப்பட்டது. ஆனால் அதுவரை பெஞ்சில் அமர்ந்திருந்த ஷமி இப்போட்டியில் வாய்ப்பு பெற்று 234/4 என்ற வலுவான நிலையிலிருந்து நியூசிலாந்தை 273 ரன்களுக்கு சுருட்டுவதில் முக்கிய பங்காற்றி தன்னை சாம்பியன் பவுலர் என்பதை நிரூபித்தார்.

இந்நிலையில் பும்ரா, சிராஜ், ஷமி, குல்தீப், ஜடேஜா ஆகியோர் அடங்கிய தற்போதைய பவுலிங் கூட்டணி மற்ற அணிகளை விட மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கும் சுரேஷ் ரெய்னா இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் தாக்கூரை போன்றவரை உள்ளே கொண்டு வந்து இந்த கூட்டணியை கலைக்க வேண்டாம் என்று ரோகித் சர்மாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஷமி, சிராஜ், பும்ரா, ஜடேஜா, குல்தீப், பாண்டியா – ஆகியோர் அடங்கிய கலவை இந்த உலகக் கோப்பையில் மிகவும் சிறப்பாக இருப்பதாக நான் கருதுகிறேன். தற்போது ஷமி 5 விக்கெட்களை எடுத்துள்ளதால் டெத் ஓவரில் 3 அட்டாக் செய்யக்கூடிய பவுலர்கள் ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளனர். மேலும் இது ஹர்திக் பாண்டியாவுக்கு சற்று நிம்மதியை கொடுக்கும். ஏனெனில் இந்த 3 பவுலர்கள் சிறப்பாக செயல்படும் போது அழுத்தம் குறைந்து விடும்”

இதையும் படிங்க: இது இந்திய ரசிகர்கள், சென்னை மைதானத்துக்கு எதிரான பாகிஸ்தானின் யுத்தம்.. அக்தர் அதிரடி பேட்டி

“அதனால் அவரால் தம்முடைய வழியில் எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். குல்தீப் – ஜடேஜா ஆகியோரும் சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக டாம் லாதம், கிளன் பிலிப்ஸ் ஆகியோரை குல்தீப் சரியான நேரத்தில் பெவிலியம் அனுப்பி வைத்தார். இல்லையென்றால் நியூசிலாந்து 290 – 310 ரன்களை அடித்திருக்கும். மேலும் ரோகித் சர்மா இந்த பவுலர்களை மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்” என்று கூறினார்.

Advertisement