சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு. சோகத்தில் குடும்பம் – ஆறுதல் கூறிவரும் பிரபலங்கள்

Raina
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2018 வரை சுமார் 13 ஆண்டுகாலம் விளையாடி உள்ளார். இந்திய அணிக்காக இதுவரை அவர் 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் பங்கேற்று சர்வதேச கிரிக்கெட்டில் 8000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அது மட்டுமின்றி பந்து வீச்சிலும் அவர் இந்திய அணிக்கு பலமுறை கை கொடுத்துள்ளார்.

Raina

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்த ரெய்னா பீல்டிங்கிலும் அசத்தக்கூடியவர் .
அதோடு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துணை கேப்டனாக செயல்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் மத்தியில் சின்ன தல என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். இதுவரை 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5528 ரன்களை குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில் தனது ஓய்வையும் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும் நிச்சயம் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

raina dad

இந்நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக் சந்த் ரெய்னா காலமாகியுள்ளது அவரது குடும்பத்தில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வேளையில் உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் எனும் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

சுரேஷ் ரெய்னாவின் தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த மறைவிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதோடு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் சுரேஷ் ரெய்னாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : தோத்தத கூட ஏத்துக்கலாம். ஆனா இந்த விஷயத்தை ஏத்துக்க முடியல – கைரன் பொல்லார்ட் வருத்தம்

சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு சென்னை அணியில் இடம் பெற்று இருந்தாலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் வெளியேற்றப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு அவர் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அவரது அடிப்படை விலையாக இரண்டு கோடி நிர்ணையிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement