தோத்தத கூட ஏத்துக்கலாம். ஆனா இந்த விஷயத்தை ஏத்துக்க முடியல – கைரன் பொல்லார்ட் வருத்தம்

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 43.5 ஓவர்களில் 176 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்டீஸ் சார்பாக அதிகபட்சமாக ஹோல்டர் 57 ரன்களும், ஃபேபியன் ஆலன் 29 ரன்களும் குவித்தனர்.

chahal

- Advertisement -

அவர்களைத் தவிர வேறு எந்த வீரரும் 20 ரன்களை கூட தொடவில்லை. இந்திய அணி சார்பாக யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தனது முதல் விக்கெட்டுக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தது.

முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த வேளையில் முதல் விக்கெட்டாக ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் விராட் கோலி 8 ரன்களில் வெளியேற ரிஷப் பண்ட்டும் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 34 மற்றும் 26 ரன்கள் குவித்து 28 ஓவரில் 178 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து போட்டி முடிந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கைரன் பொல்லார்ட் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் 22 ஓவர்கள் மிச்சம் வைத்து தோற்றது ஒரு மிகப்பெரிய தோல்வி இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோன்று பேட்டிங்கிலும் நாங்கள் 50 ஓவர் முழுவதுமாக விளையாட முடியவில்லை.

- Advertisement -

இதெல்லாம் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். எங்களிடம் நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் டெக்னிக்கில் சற்று குளறுபடி உள்ளது. எனவே நிச்சயம் நாங்கள் அதனை சரிசெய்தாக வேண்டும். கடைசி இரண்டு நாட்கள் எங்களுக்கு கடினமாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் ஒரு முக்கிய காரணியாக நான் பார்க்கிறேன்.

இதையும் படிங்க : ஆட்டோ ஓட்டப்போ என கலாய்த்த ரசிகர்கள், மீண்டுவர உதவிய தோனியின் அறிவுரை – உருகும் இந்திய ஸ்டார் வீரர்

ஏனெனில் நாங்கள் டாஸில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் இரண்டாவதாக பேட்டிங் செய்ய தேர்வு செய்திருப்போம். விளக்கு வெளிச்சத்தின் அடியில் விளையாடுவது எங்களுக்கு சாதகமாக கூட இருந்திருக்கலாம் என்று தோல்வி குறித்து பொல்லார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement