கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐபிஎல் தொடரானது இந்தியாவில் பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக பயோ பபுள் வளையத்துடன் பாதுகாப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் மும்பை அணி சிறப்பாக விளையாடி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக நட்சத்திர வீரர் ரெய்னா விளையாடவில்லை.
கடந்த ஆண்டு துபாய் வந்த சுரேஷ் ரெய்னா தனக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறையில் பால்கனி இல்லை என்றுகூறி சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சண்டையில் ஈடுபட்டு நாடு திரும்பி கடந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு தற்போது மீண்டும் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு இதே போன்ற சூழ்நிலையில் தான் அவர் தொடரில் இருந்து வெளியேறினார் என்பதனால் இந்த ஆண்டு என்ன நடக்கும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
மேலும் சுரேஷ்ரெய்னா குறித்து மீம்ஸ்களும் பரந்தன. இந்நிலையில் தற்போது தான் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பதை உறுதி செய்துள்ள சுரேஷ்ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். அதில் “சீ யூ சூன் துபாய்” என தோனியுடன் அவர் நடந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் நிச்சயம் இந்த வருட ஐபிஎல் தொடரில் அவர் ஐக்கிய அரபு அமீரகம் வந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
See you soon Dubai 💪🏏 @msdhoni @IPL @ChennaiIPL pic.twitter.com/5nWAZZ5BqJ
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 29, 2021
ஏற்கனவே சுரேஷ் ரெய்னா இல்லாமல் கடந்த ஆண்டு விளையாடிய சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் சிறப்பாக விளையாடி வரும் சி.எஸ்.கே அணி நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சிஎஸ்கே அணி 2-வது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.