சர்ப்ரைஸ்! ஐபிஎல் 2022 தொடரில் கையொப்பமிட்டு ஒப்பந்தமான சுரேஷ் ரெய்னா – எதற்கு தெரியுமா?

Raina
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த வருடம் 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கமாக நடைபெறும் 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. வரும் மே 29-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறவுள்ளது.

ipl

- Advertisement -

சுரேஷ் ரெய்னா இல்லாத ஐபிஎல்:
இந்த தொடர் துவங்க இன்னும் 10 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் கோப்பையை வெல்வதற்காக நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அனைத்து அணிகளும் மும்பையில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. முன்னதாக இந்த ஐபிஎல் தொடருக்காக கடந்த மாதம் பெங்களூருவில் மெகா அளவில் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் வாங்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

குறிப்பாக ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த அவர் தனது அபார செயல்பாடுகளால் அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றி வந்தார். இதனால் கேப்டன் எம்எஸ் தோனிக்கு பின் அடுத்த கேப்டன் எனப் பேசப்படும் அளவுக்கு சென்னை அணியின் முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுத்த அவரை சென்னை மற்றும் தமிழக ரசிகர்கள் “சின்னத்தல” என்று தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். மேலும் ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் அடித்த முதல் வீரர் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்த அவரை மிஸ்டர் ஐபிஎல் என ஜாம்பவான்களும் வல்லுநர்களும் அழைத்து வந்தனர்.

Raina-1

ஒரு காலத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களை பந்தாடி பெயரைக்கேட்டாலே அதிரும் அளவுக்கு விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா கடந்த 2019-க்கு பின் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் மோசமான பார்மில் இருந்து வந்தார். அதன் காரணமாக அவரை சென்னை உள்ளிட்ட எந்த அணி நிர்வாகமும் வாங்காததால் வரலாற்றில் முதல் முறையாக சுரேஷ் ரெய்னா இல்லாத ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடைபெற இருந்தது.

- Advertisement -

வர்ணனையாளர்கள் ரெய்னா:
ஒரு காலத்தில் மிஸ்டர் ஐபிஎல் என பெயரெடுத்த ஒருவருக்கு இன்று ஐபிஎல் தொடரில் இடமில்லை என்ற நிலைமையால் பல ரசிகர்களும் சோகத்துடன் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ஐபிஎல் 2022 தொடரில் சுரேஷ் ரெய்னா பங்கேற்கப் போவது நிச்சயம் ஆனால் களத்தில் அல்ல. ஆம் ஐபிஎல் 2022 தொடரில் சுரேஷ் ரெய்னா ஒரு தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.

Ravi Shastri Suresh Raina

குறிப்பாக ஐபிஎல் தொடரை இந்தியாவில் ஒளிபரப்பு செய்யும் பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளர்கள் குழுவில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதிலும் ஹிந்தி மொழியில் அவர் ஐபிஎல் தொடருக்கு வர்ணனை செய்வார் என தெரிகிறது.

- Advertisement -

இணையும் ரவி சாஸ்திரி:
இவருடன் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் 2022 தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார் என தெரியவருகிறது. 80களில் இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்த அவர் ஓய்வு பெற்ற பின் நேரடி கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணணை செய்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். குறிப்பாக 2007-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கோப்பையை வென்ற போதும் அதே உலக கோப்பையில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்க விட்ட போதும் அவர் செய்த வர்ணனைகள் காலத்தால் அழிக்க முடியாததாகும்.

shastri

அதை விட கடந்த 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எம்எஸ் தோனி சிக்ஸர் அடித்து இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுத்த போது அவர் செய்த வர்ணனை இப்போது கேட்டாலும் கூட ரசிகர்களுக்கு புல்லரிக்கும். அந்த அளவுக்கு வர்ணனை செய்வதில் வல்லவராக இருந்த அவர் கடந்த 2017 – 2021 வரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்ததால் வர்ணனை செய்யாமல் இருந்து வந்தார்.

இதையும் படிங்க : ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் – டாப் 10 ல் 3 இந்திய வீரர்கள் (லிஸ்ட் இதோ)

தற்போது அந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து அவர் மீண்டும் தொலைக்காட்சி வர்ணனையில் ஈடுபட உள்ளார். மொத்தத்தில் ஐபிஎல் 2022 தொடரில் ரவி சாஸ்திரி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் வர்ணனை செய்து ரசிகர்களுக்கு விருந்து மழை படைக்க உள்ளனர். இருப்பினும் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement