ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் – டாப் 10 ல் 3 இந்திய வீரர்கள் (லிஸ்ட் இதோ)

Rohith
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே மூன்று வகையான கிரிக்கெட்டின் தரவரிசைப் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை மற்றும் டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

Pant

- Advertisement -

அந்த வகையில் ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் லாபுஷேன் 936 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 872 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் 851 புள்ளிகளுடன் இருக்கிறார். நான்காம் இடத்தில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 844 புள்ளிகளுடன் இருக்கிறார்.

இந்தத் தரவரிசையில் முதல் 5 இடங்களில் எப்போதுமே இடம் பிடித்திருக்கும் விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக ஏற்கனவே 5வது இடத்தில் இருந்த அவர் தற்போது நான்கு இடங்கள் பின்தங்கி 742 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு சரிந்துள்ளார். அதே வேளையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சதமடித்த இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே 781 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ranking

இந்த டாப் 10 பட்டியலில் விராட் கோலி 9-வது இடத்திலும், 10வது இடத்தில் ரிஷப் பண்ட் 738 புள்ளிகளுடனும் இருக்கின்றனர். அதேவேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 754 புள்ளிகளுடன் இந்த புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். இதன் காரணமாக டாப்-10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் 3 பேர் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

அதேபோன்று ஐசிசி வெளியிட்டுள்ள பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலிடத்திலும், தமிழக வீரர் அஸ்வின் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மேலும் இந்த டெஸ்ட் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னர் 10-வது இடத்தில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான ஆட்டத்தை இலங்கை அணிக்கு எதிராக வெளிப்படுத்தியதால் 6 இடங்கள் முன்னேற்றம் கண்டு தற்போது 830 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

ranking 1

மேலும் அதேபோன்று ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஜேசன் ஹோல்டர் முதலிடத்திலும், ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்திலும், தமிழக வீரர் அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement