இளம்வீரர்களுக்கு வழிவிடவே நான் ஓய்வு முடிவை எடுத்தேன் – பெங்களூரு போட்டியில் ஓய்வை அறிவித்த வீரர்

Sl
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. பெங்களூர் மைதானத்தில் கடந்த 12-ஆம் தேதி துவங்கிய இந்த இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இலங்கை அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த பெங்களூரு டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த வேளையில் போட்டி முடிந்த பின்னர் சீனியர் வீரர் ஒருவர் ஓய்வு முடிவை அறிவித்தது சற்று வருத்தமான விடயமாகவே மாறியது.

lakmal 2

- Advertisement -

அதன்படி இலங்கை அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான 35வயது சுரங்கா லக்மல் இந்த பெங்களூரு போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இவர் 86 ஒருநாள் போட்டிகளிலும், 70-வது டெஸ்ட் போட்டிகளிலும், 11 டி20 போட்டியிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 171 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 109 விக்கெட்டுகள், டி-20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் இந்த இந்திய சுற்றுப் பயணத்திற்கு முன்னதாகவே தான் இந்த டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவேன் என்று அவர் அறிவித்த படி தற்போது பெங்களூரு டெஸ்ட் முடிந்த பிறகு தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் இந்த ஆய்வு முடிவு குறித்து தற்போது தெளிவான விளக்கத்தை அவரே அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

lakmal 1

என்னுடைய அணிக்காக நான் இதுவரை சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளதாக உணர்கிறேன். 13 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு நான் விளையாடி உள்ளேன். தற்போது எனக்கு 35 வயதாகும் வேளையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட என்னால் விளையாட முடியும். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் நான் விளையாடுவதை விட என்னுடைய இடத்தில் ஒரு இளம் வீரர் வந்து விளையாடுவதை பார்ப்பது மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும் என தோன்றுகிறது. இதன் காரணமாகவே நான் ஓய்வு முடிவை அறிவித்தேன்.

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பின்னர் ஓய்வு பெறலாம் என்று நான் நினைத்தால் அதற்கு இன்னும் ஐந்து முதல் பத்து போட்டிகள் தேவைப்படும் ஆனால் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் எனக்கு பெரியது கிடையாது. எனவே இளம் வீரர் என்னுடைய இடத்தில் விளையாடி அணிக்கு பங்காற்ற வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடனே நான் அணியிலிருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க : கெடைக்குற வாய்ப்பை எல்லாம் வீணடிக்குறாரு. இப்படியே போனா தூக்கிடுவாங்க – எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

நிச்சயம் இலங்கை அணி எதிர்காலத்தில் நல்ல வீரர்களை ஊக்குவித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தான் நம்புவதாக சுரங்கா லக்மல் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் லக்மல் வெளியேறுகையில் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு சிறப்பான பிரியாவிடை கொடுத்தனர். மேலும் இலங்கை வீரர்களும் அவரை கைதட்டி ஆரவாரமாக வரவேற்று பிரியா விடைகொடுத்தனர்.

Advertisement