கெடைக்குற வாய்ப்பை எல்லாம் வீணடிக்குறாரு. இப்படியே போனா தூக்கிடுவாங்க – எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதானத்தில் இன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இலங்கை அணியின் வெற்றிக்கு 447 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. அதனை துரத்தி விளையாடிய இலங்கை அணி 208 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இந்திய அணியானது 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை வாஷ் அவுட் செய்துள்ளது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

INDvsSL cup

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரில் பெரும்பாலான இந்திய வீரர்களின் செயல்பாடு அனைவருக்கும் திருப்தி அளித்த வேளையில் இந்திய அணியில் ஒரு வீரரின் செயல்பாடு மட்டும் தனக்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளதாகவும் அவர் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :

இந்திய அணியை பொறுத்தவரை தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் அனைவரும் மிகச் சரியாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தொடக்க வீரரான மாயங்க் அகர்வால் மட்டும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தொடர்ச்சியாக வீணடித்து வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தென் ஆப்பிரிக்க தொடரில் சுமாராக செயல்பட்டார். ஆனால் தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இடம் பிடித்து சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த வேளையில் இந்த தொடரிலும் அவர் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறினார்.

agarwal-1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : மாயங்க் அகர்வால் தொடர்ச்சியாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவேண்டும் எனில் பெரிய இன்னிங்ஸ்கள் விளையாட வேண்டியது அவசியம். ஏனெனில் துவக்க வீரர்களுக்கான இடத்தில் ஏற்கனவே கே.எல் ராகுல், சுப்மன் கில், ப்ரித்வி ஷா, ப்ரியன்க் பான்சால் என ஏகப்பட்ட வீரர்கள் வரிசையில் நிற்கின்றனர். எனவே இதுபோன்று அவர் தொடர்ச்சியாக பெறும் வாய்ப்புகளை வீணடிப்பது அவரது இடத்தை இழக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும்.

- Advertisement -

தற்போதுள்ள சூழலில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கூட அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட வேண்டும். இதனால் இனி கிடைக்கும் வாய்ப்புகளில் மாயங்க் அகர்வால் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும் என்று கூறியுள்ளார். அவர் கூறியது போலவே மாயங்க் அகர்வால் தனது வாய்ப்பை வீணடித்து விட்டார் என்றே கூறலாம். ஏனெனில் இந்த இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து நிலையில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதையும் படிங்க : போன மேட்ச் கபில் தேவ். இந்த மேட்ச் டேல் ஸ்டெயின் – அடுத்தடுத்து சாதனைகளை தகர்த்து – அஷ்வின் அபாரம்

பின்னர் இரண்டாவது இன்னிங்சிலாவது பொறுப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரர்கள் இதுபோன்று சொற்ப ரன்கள் குவிப்பது அணிக்கும் பாதகத்தை ஏற்படுத்தும், அதேபோன்று தனிப்பட்ட முறையில் அவருக்கும் பாதகம். எனவே இனிவரும் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டெஸ்ட் அணியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement