போன மேட்ச் கபில் தேவ். இந்த மேட்ச் டேல் ஸ்டெயின் – அடுத்தடுத்து சாதனைகளை தகர்த்து – அஷ்வின் அபாரம்

Ashwin
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் போராடி 252 ரன்களை எடுத்தது. ஏனெனில் முதல் நாளன்றே தாறுமாறாக சுழன்ற பெங்களூரு பிட்சில் ரோஹித் சர்மா உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய போது ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் தனி ஒருவனாக இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடினார். தொடர்ந்து பட்டையை கிளப்பிய அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 92 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஆட்டமிழந்தார்.

shreyas iyer

- Advertisement -

இந்தியா அபாரம்:
இதை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மொகாலியில் நடந்த முதல் போட்டியை விட படு மோசமாக பேட்டிங்கை வெளிப்படுத்தியது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோருக்கு பதில் சொல்ல முடியாத இலங்கை வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 41 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அசத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதை தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு இம்முறை கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக வந்த ரிஷப் பண்ட் வெறும் 31 பந்துகளில் அதிரடியாக 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் முதல் இன்னிங்சை போலவே அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் எடுக்க இந்தியா தனது முதல் இன்னிங்சை 303/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது.

Bumrah 1

அதை தொடர்ந்து 447 என்ற இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் மற்றும் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே மட்டும் தனி ஒருவனாக பேட்டிங் செய்து 15 பவுண்டரிகள் உட்பட சதமடித்து 107 ரன்கள் குவித்து தோல்வியை தவிர்க்க போராடினார். இருப்பினும் இதர வீரர்கள் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த அணி 208 ரன்களுக்கு மீண்டும் ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியா ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் 2 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது.

ind

வார்னே, டேல் ஸ்டைனை முந்திய அஷ்வின்:
முன்னதாக இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 8-வது பந்துவீச்சாளர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயினை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை இதுநாள் வரை தென் ஆப்பிரிக்கா கண்ட மகத்தான வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் டேல் ஸ்டெயின் 93 போட்டிகளில் 439 விக்கெட்டுகளை எடுத்து தன்வசம் வைத்திருந்தார். ஆனால் தற்போது 86 போட்டிகளில் 442 விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின் அவரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது இந்திய பந்துவீச்சாளராக இருந்த ஹர்பஜன்சிங் சாதனையை உடைத்தார். அதன்பின் கடந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த கபில் தேவை முந்தியிருந்தார். அதன்படி டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்த அஷ்வின் தற்போது டேல் ஸ்டெய்னை பின்னுக்கு தள்ளி ஒட்டுமொத்த சாதனை பட்டியலில் 8வது இடத்தில் ஜொலிக்கிறார்.

Advertisement