தம் பிரியாணி சாப்புட வரல…தம் பிடிச்சி அடிக்க வந்தோம்..! எல்லாம் டெரர் ஆய்டும் – சென்னை தமிழில் கலக்கிய ஹர்பஜன் !

- Advertisement -

ஐ பி எல் போட்டிகளில் சென்னை அணி மற்ற அணி வீரர்களை தொம்சம் செய்து வருகின்றது. நேற்று ஹைதராபாதிற்கு எதிரான போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சிறப்பாக ஆடிய சென்னை அணியின் அம்பத்தி ராயுடுவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார் சென்னை அணியில் ஆடி வரும் ஹர்பஜன் சிங்.
suresh

நேற்று மாலை ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைத்ராபாத் அணி சென்னை அணியை முதலில் கலமிரக்கியது. ஆனால் ஆரம்பத்திலேயே சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரகளான வாட்சனும், டூபிளிசியும் ஆரம்பத்திலேயே அவுட்டாகி சென்னை அணிக்கு ஷாக் கொடுத்தனர்.ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய சின்ன தல ரெய்னாவும் , அம்பத்தி ராயுடு ஜோடி ஹைத்ராபாத் அணியின் பந்துகளை பதம் பார்த்தனர்.

- Advertisement -

அம்பத்தி ராயுடு ஒரு புறம் பௌண்டறிகளை தெறிக்கவிட மறு புறம் ஆடிய ரெய்னா நிதானமாக ஆடி அவருக்கு பக்க பலமாக இருந்து வந்தார். இறுதியில் இருவரும் அரை சதமடிக்க சென்னை அணியின் ரன்கள் வெகுவாக உயர்ந்து வந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று தடுமாறிய அம்பத்தி ராயுடு ரன் அவுட் ஆகி தனது விக்கட்டை பறிகொடுத்தார்.அதன் பின்னர் களமிறங்கிய தல தோனி 12 பந்துகளில் 25 ரன்களை குவிக்க அணியின் எண்ணிக்கை ஆட்டத்தின் முடிவில் 182 எட்டியது.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைத்ராபாத் அணி ஆட்டத்தின் சில பந்துகளிலேயே ஒரு விக்கெட்டை இழந்தது இருப்பினும் வில்லியம்சன் ஒரு புறம் சிறப்பாக ஆடிவர மறுபுறம் விக்கெட் டுகளும் சரிந்து கொண்டே இருந்தது. பின்னர் களமிறங்கிய யூசப் பதான் சென்னை அணியின் பந்துகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.ஒரு கட்டத்தில் வெற்றியின் விழும்பிற்கு வந்த ஹைத்ராபாத் அணி பின்னர் 2 பந்துகளில் 10 ரன்கள் என்று என்ற நிலையில் இருந்தது பின்னர் வழக்கம் போல சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்றது.

இதுகுறித்து சென்னை அணியில் ஆடிவரும் ஹர்பஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது என்னவென்றால் “வீழ்த்தி விடாலம் என்று நினைத்தாயோ , சூதுவாது தெரியாம சென்னை கிட்ட சலம்பலா .இங்கே பேமெஸ் தம் பிரியாணி சாப்பிட்டு போக வரல தம் புடிச்சி விளையாட வந்தோம் .சால பாக உந்தி(நன்றாக இருக்கிறது) சீரக திஸ்தாவுறா ஓப்பனிங் ல இறக்குவோம் பௌலற்கு எல்லாம் டேரர் ஆகிடும் அருமை சன் ரைசெஸ் என்று தமிழில் ட்வீட் செய்து அசத்தியுள்ளார்.

Advertisement