சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சன் ரைசர்ஸ் அணியிடம் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த தொடருக்கான புள்ளி பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்து வெளியேறியது. இந்த தொடரின் ஆரம்பத்தில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட கொல்கத்தா அணி 14 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 7 தோல்விகளுடன் எட்டாம் இடத்தை பிடித்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
உலகளவில் முதல் வீரராக அசத்தல் சாதனையை நிகழ்த்திய சுனில் நரேன் :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹென்றிச் கிளாஸன் 105 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 76 ரன்களையும் குவித்தனர்.
அதன் பின்னர் 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி தோல்வியை தழுவி இருந்தாலும் கொல்கத்தா அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரேன் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
நேற்றைய போட்டியின் போது 4 ஓவர்களை வீசிய அவர் 42 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 2 விக்கெட்டுகளின் மூலம் டி20 போட்டிகளில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டை வீழ்த்திய உலகளாவிய வீரர் என்ற சாதனையை சுனில் நரேன் படைத்துள்ளார். இதுவரை கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் நேற்று எடுத்த 2 விக்கெட்டுகளோடு சேர்த்து 210 விக்கெட்டை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க : மினி ஆஷஸ் இங்கிலாந்தை எதுத்து நிற்க இந்தியாவிடம் தில் இருக்கு.. ஆனா மாரத்தான் மட்டுமே பிரச்சனை.. ஏபிடி பேட்டி
இதற்கு முன்னதாக ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இங்கிலாந்து நாட்டின் சமித் படேல் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக 208 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ள சுனில் நரேன் 210 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



