மினி ஆஷஸ் இங்கிலாந்தை எதுத்து நிற்க இந்தியாவிடம் தில் இருக்கு.. ஆனா மாரத்தான் மட்டுமே பிரச்சனை.. ஏபிடி பேட்டி

AB De Villiers
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக ஜூன் மாதம் துவங்கும் அத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் சாய் சுதர்சன் உட்பட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பல ஜாம்பவான் வீரர்கள் விளையாடியும் இங்கிலாந்து மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றதில்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்த இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நின்று வெற்றியைப் பெறும் அளவுக்கு தற்போதைய இளம் இந்திய அணியிடம் திறமை இருப்பதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

திறமை இருக்கு:

இருப்பினும் அத்தொடர் மினி ஆஷஸ் போல 3 மாதங்கள் 5 போட்டிகளாக நடைபெறுவது இந்திய அணியின் வெற்றிக்கு பின்னடைவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2 பவர் ஹவுஸ் அணிகள் மோதும் அத்தொடர் கிட்டத்தட்ட ஆஷஸ் போன்றது. இந்த புதிய இந்திய அணிக்கு கில் கேப்டனாகவும் ரிசப் பண்ட் துணை கேப்டனாகவும் உள்ளனர்”

“அவர்கள் இங்கிலாந்தில் சோதிக்கப்படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இளம் இந்திய வீரர்கள் பயமற்றவர்களாக விளையாடுகின்றனர். பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரைக் கொண்ட பவுலிங் அட்டாக் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சர்துள் தாக்கூர் கொஞ்சம் பேட்டிங் செய்யக் கூடியவர். ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோரைக் கொண்ட இந்திய அணியின் பவுலிங் அட்டாக் சிறப்பாகவே இருக்கிறது”

- Advertisement -

பெரிய தொடர் பிரச்சனை:

“இருப்பினும் டெஸ்ட் போட்டியை வெல்ல நீங்கள் 10 விக்கட்டுகளை எடுத்தாக வேண்டும். குறிப்பாக இங்கிலாந்து பவுலர்கள் தங்களுடைய சொந்த மண்ணில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிவார்கள். இந்திய அணியில் அனுபவமில்லை என்றாலும் இங்கிலாந்துக்கு எதிராக நின்று விளையாடுவதற்கு போதுமான திறமை இருக்கிறது”

இதையும் படிங்க: ரெய்னா 2026 சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆகிறரா? பவுலிங் கோச் ஸ்ரீராம் பதில்

“ஆனால் 5 போட்டிகள் நடப்பது தான் எனக்கு கவலையாளிக்கிறது. ஏனெனில் அது மராத்தான் போன்றது. அதில் இளம் வீரர்களால் ஓரிரு போட்டிகளில் அசத்த முடியும். ஆனால் 2 – 3 மாதங்கள் நடைபெறப் போகும் அத்தொடரில் உங்களால் ஒரு போட்டியில் அசத்தினால் மட்டும் வெற்றி பெற முடியாது. அத்தொடரில் ஏராளமான கிரிக்கெட்டும் சவால்களும் இருக்கின்றன. அங்கே நீங்கள் வெற்றி பெற டெக்னிக்கல் அளவில் வலுவாகவும் அமைதியாகவும் ரிலாக்ஸாகவும் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement