ரெய்னா 2026 சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆகிறரா? பவுலிங் கோச் ஸ்ரீராம் பதில்

Sriram CSK
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மோசமான சாதனை படைத்து வெளியேறியது. அந்த அணியின் இந்தப் படுதோல்விக்கு பேட்டிங் துறையில் அதிரடியாக விளையாடாதது முக்கிய காரணமானது. குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் சிஎஸ்கே அணி ரன்களை அடிப்பதற்கு பதில் விக்கெட்டுகளை இழந்தது தோல்வியைக் கொடுத்தது.

அதனால் இந்த வருடம் மோசமாக விளையாடி முதல் அணியாக வெளியேறிய சென்னையை சமூக வலைதளங்களில் எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். அவர்களுக்கு நேற்றைய குஜராத்துக்கு எதிரான போட்டியில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தரமான பதிலடியை கொடுத்தார். அதாவது “கழுகு வெறும் 4 நாட்கள் பறக்காவிட்டால், அதற்காக மொத்த வானமும் புறாக்களுக்குச் சொந்தமாகி விடாது” என்று நேரலை வர்ணணையில் ரெய்னா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

பேட்டிங் கோச் ஆகிறரா:

அப்போது அவரிடம் “எஸ் என்ற எழுத்தில் துவங்கும் பெயரைக் கொண்ட நபர் அடுத்த வருடம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராகிறாரா?” என்று ஆகாஷ் சோப்ரா கேட்டார். அதற்கு “அந்த நபர் சிஎஸ்கே அணிக்காக வேகமான அரை சதத்தை அடித்தவர்” என்று சுரேஷ் ரெய்னா பதிலளித்தார். அப்படியானால் “அது உறுதியாகி விட்டது. கேட்டுக் கொள்ளுங்கள் ரசிகர்களே” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

அதாவது எஸ் என்ற எழுத்தில் துவங்கும் பெயரைக் கொண்ட சுரேஷ் ரெய்னா 2014இல் பஞ்சாப்புக்கு எதிராக சிஎஸ்கே அணிக்காக வேகமான அரை சதத்தை (16 பந்துகளில்) அடித்து சாதனைப் படைத்தார். எனவே அடுத்த வருடம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் போகிறேன் என்பதை சுரேஷ் ரெய்னா மறைமுகமாக தெரிவித்ததாக சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

பவுலிங் கோச் பதில்:

இந்நிலையில் அது பற்றி கேட்டதற்கு சென்னை அணியின் பௌலிங் பயிற்சியாளர் ஸ்ரீராம் ஸ்ரீதரன் தமக்குத் தெரியாது என்று புன்னகைத்தவாறு பதிலளித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனக்குத் தெரியாது. நீங்கள் இப்படி சொன்னீர்களா? என்று இது பற்றி சுரேஷ் ரெய்னாவிடம் நான் கேட்க வேண்டும். இந்த வருடம் நாங்கள் வலுக்கட்டாயத்தால் சில மாற்றங்களை செய்தோம்”

இதையும் படிங்க: எப்படி போட்டாலும் அடிச்சா இதான் நடக்கும்.. சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான தோல்விக்கு பின் – ரஹானே வருத்தம்

“சில வீரர்கள் காயத்தைச் சந்தித்ததால் அவர்களுக்கான மாற்று வீரர்களைக் கொண்டு வந்தோம். அதிர்ஷ்டவசமாக மாற்று வீரராக வந்தவர்கள் எங்களுக்கு நன்றாக விளையாடியுள்ளனர். அதற்காக ஏலத்தில் நாங்கள் அதிக தவறுகளை செய்தோம் என்று சொல்லி தேவையில்லாததை பேச மாட்டேன்” எனக் கூறினார். மொத்தத்தில் இந்த வருடம் சென்னை அணி தோற்றாலும் ஆயுஷ் மாத்ரே, தேவால்ட் ப்ரேவிஸ், உர்வில் படேல் போன்ற வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement