பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனையை நிகழ்த்திய – சுனில் நரேன்

Narine
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 60-ஆவது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்தது.

- Advertisement -

கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களையும், நித்திஷ் ரானா 33 ரன்களையும் குவித்தனர். பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 16 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது.

அதன் காரணமாக கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை சார்பாக இஷான் கிஷன் 40 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணியின் சார்பாக விளையாடிய சுனில் நரேன் தான் சந்தித்த முதல் பந்திலேயே பும்ராவின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் போல்டு முறையில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவர் அடைந்த இந்த விக்கெட்டின் மூலம் அவர் சர்வதேச டி20 போட்டியில் மோசமான சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் இதுவரை அதிக முறை டக் அவுட் ஆனவர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த அலெக்ஸ் ஹேல்ஸ்ஸை பின்னுக்கு தள்ளி தற்போது சுனில் நரேன் முதலிடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : முக்கிய போட்டியில் 77/7.. ஆர்சிபி’க்கு ஏமாற்றத்தை கொடுத்த டிகே மோசமான சாதனை.. டெல்லி அசத்தல் கம்பேக்?

இதுவரை அனைத்து வகையான டி20 கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து சுனில் நரேன் 44 முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். அவருக்கு அடுத்து அலெக்ஸ் ஹேல்ஸ் 43 முறையும், ரஷீத் கான் 42 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர். அதோடு ஐபிஎல் தொடரில் சுனில் நரேன் 16 முறையாவது டக் அவுட்டாவது குறிப்பிடத்தக்கது.

Advertisement