- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக சுனில் நரேன் நிகழ்த்திய வரலாற்று சாதனை – விவரம் இதோ

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியில் விளையாடிய நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த தொடரின் முதல் 4 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் முதல் நபராக சுனில் நரேன் நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 60 ரன்களையும், ரகுவன்சி 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக 4 ஓவர்களை வீசி 30 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த ஒரு விக்கெட் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நபராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதாவது ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சுனில் நரேன் நிகழ்த்தியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மட்டும் நேற்று எடுத்த ஒரு விக்கெட்டோடு சேர்த்து 200 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இதையும் படிங்க : அந்த ஒரே காரணத்துக்காக உங்களை டீம்ல வச்சிருக்க முடியாது.. ரவிச்சந்திரன் அஷ்வின் குறித்து – ரசிகர்கள் விமர்சனம்

இதில் 182 ஐ.பி.எல் விக்கெட்டுகள் மற்றும் 18 சாம்பியன்ஸ் டி20 லீக் விக்கெட்டுகள் அடங்கும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 195 விக்கெட்டுகளை எடுத்து லசித் மலிங்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -