விராட் கோலியை சீண்டிய தெ.ஆ வீரர் பர்கர்.. நேரலையிலேயே பஞ்ச் கொடுத்த சுனில் கவாஸ்கர் – நடந்தது என்ன?

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி நேற்று கேப்டவுன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சொந்த மண்ணில் 55 ரன்களுக்கு சுருண்டு மோசமான சாதனையை நிகழ்த்தியது.

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 153 ரன்களை குவிக்கவே தற்போது 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் 36 ரன்கள் பின்தங்கிய நிலையில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தின் போது தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான பர்கர் இந்திய அணியின் முன்னணி வீரரான கோலியை சீண்டும் வகையில் நடந்து கொண்ட விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதலாவது போட்டியின் போது அறிமுகமான பர்கர் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் பர்கர் இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது அனுபவம் வாய்ந்த விராட் கோலிக்கு எதிராக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.

- Advertisement -

மேலும் பந்தை அவர் மீது த்ரோ செய்ய நினைத்தது, விராட் கோலி அருகில் சென்று முனு முனுத்தது என தொடர்ச்சியாக அவர் விராட் கோலியை சீண்டினார். இதனை கவனித்த இந்திய அணியில் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் வர்ணனையின் போது நேரலையிலே பர்கரை எச்சரித்து ஒரு கருத்தினை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் கவாஸ்கர் கூறுகையில் :

இதையும் படிங்க : இந்தியாவை முடிக்க அதுவே போதும்.. இப்போவும் எங்களால் ஜெயிக்க முடியும்.. டீன் எல்கர் சவாலான பேட்டி

உங்களுடைய கோபத்தை காண்பிப்பதற்கு சரியான நபர் விராட் கோலி கிடையாது. ஜாக்கிரதையாக இருங்கள் என்று குறிப்பிட்டார். அதேபோன்று ரசிகர்களும் ஏற்கனவே விராட் கோலியை எதிர்த்து ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட பல பவுலர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். உங்களது கரையரை ஆரம்பத்திலேயே முடித்துக் கொள்ள வேண்டாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்பது போன்ற தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement