அந்த 2 பேர்ல ஒருத்தரை தூக்கிட்டு சஞ்சு சாம்சனை விளையாட வைங்க.. கம்பீருக்கு கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் செப்டம்பர் 9ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடரில் களமிறங்கும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான அணியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட உள்ளார். ஏனெனில் நீண்ட காலம் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடி வந்த அவருக்கு கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் 3 சதங்கள் அடித்த சாம்சன் ஒருவழியாக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தமக்கான முத்திரையைப் பதித்தார். ஆனால் தற்போது இந்திய அணி நிர்வாகம் சுப்மன் கில்லை புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக உருவாக்க விரும்புகிறது. அதனால் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

சாம்சன் விளையாடனும்:

மறுபுறம் 3, 4வது இடங்களில் திலக் வர்மா, கேப்டன் சூரியகுமார் விளையாடுவார்கள். மிடில் ஆர்டரில் பாண்டியா, துபே அல்லது ரிங்கு, அக்சர் படேல் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதனால் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவும் ஓப்பனிங்கில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் அபிஷேக் – சுப்மன் கில் களமிறங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் சாம்சன் போன்ற முக்கியமான வீரர் ஜிதேஷ் அல்லது துபே/ரிங்கு ஆகியோருக்கு பதில் விளையாட வேண்டும் என்று கௌதம் கம்பீரை ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் போன்றவரை நீங்கள் ரிசர்வ் வீரராக எடுத்துச் செல்ல முடியாது. அவர் நம்முடைய கரு அணியின் வீரராக இருந்தால் கண்டிப்பாக விளையாட வேண்டும்”

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:

“அதற்காக அவரை 3வது இடத்தில் அல்லது தேவைப்பட்டால் லோயர் ஆர்டரில் ஃபினிஷராக பயன்படுத்தலாம். என்னைப் பொறுத்த வரை சாம்சன் குறைந்தபட்சம் முதல் 2 போட்டிகளில் ஜிதேஷ்க்கு பதிலாக விளையாடுவார் என்று தோன்றுகிறது. அதன் பின் ஃபார்மை பொறுத்து தேர்வு அமையலாம். திலக் வர்மா 5 அல்லது 6வது இடத்தில் விளையாடலாம். ஹர்திக் பாண்டியாவும் அங்கே இருப்பார்”

இதையும் படிங்க: வெறும் 4 ரன்ஸ்.. கடைசி பந்தில் அமீரகத்தை சாய்த்த ஆப்கானிஸ்தான்.. முத்தரப்பு ஃபைனலில் மோதல் எப்போது?

“அது சாம்சன் 3வது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். அக்சர் படேல் இடது கை பேட்ஸ்மேன் ஆப்ஷனையும் 4 ஓவர்களையும் கொடுப்பார். அதை மனதில் வைத்தால் ரிங்கு அல்லது துபே போன்றவர் தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். டி20 போட்டிகளில் 8வது இடம் வரை உங்களால் பேட்டிங்கை தைய்க்க முடியாது. ஏனெனில் பந்து வீச்சில் உங்களுக்கு வெரைட்டி தேவை. ஒரு பவுலருக்கு மோசமான நாள் அமைந்தால் மற்றொரு பவுலர் அசத்துவது அவசியம்” என்று கூறினார்..

Advertisement