பாவம் அவங்க, சரிந்து கிடக்கும் வெஸ்ட் இண்டீஸ் சரித்திரம் மீள்வதற்கு அதை செய்ங்க – கவாஸ்கர் முக்கிய ஆலோசனை

Sunil Gavaskar WI
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. குறிப்பாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத அந்த அணி எதிர்பார்த்தது போலவே இரண்டரை நாட்களில் சுருண்டு தோற்றது. அதை விட சமீபத்தில் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற குவாலிபயர் தொடரில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றில் முதல் முறையாக அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியது அனைத்து ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Siraj

- Advertisement -

ஏனெனில் 1950 காலகட்டங்களிலேயே ஆஸ்திரேலியா,இங்கிலாந்தை தெறிக்க விட்ட வெஸ்ட் இண்டீஸ் 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்த அணியாகும். மேலும் 80களில் விவ் ரிச்சர்ட்ஸ், ஹெய்ண்ஸ், க்ரீனிட்ஜ் போன்ற தரமான பேட்ஸ்மேன்களையும் ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், கர்ட்லி ஆம்ப்ரோஸ், மால்கம் மார்ஷல் போன்ற எதிரணியினரின் மண்டையை பதம் பார்க்கும் வெறித்தனமான பவுலர்களையும் கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் மிகவும் பலமான அணியாக ஒட்டுமொத்த உலகையே ஆட்சி செய்து வெற்றி நடை போட்டு வந்தது.

கவாஸ்கர் ஆதங்கம்:
இருப்பினும் பிரையன் லாரா ஆகியோருக்குப் பின் தரமான அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் இல்லாமல் 21ஆம் நூற்றாண்டில் கொஞ்சமாக சரிந்த அந்த அணி தற்போது ஸ்காட்லாந்திடம் தோற்கும் அளவுக்கு கத்துக்குட்டியாக மாறிப் போயுள்ளது. இவை அனைத்துக்கும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிலவும் பொருளாதார நெருக்கடியே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக போதிய சம்பளம் கொடுக்கவில்லை என்பதற்காக கிறிஸ் கெயில், பொல்லார்ட், ப்ராவோ போன்ற பலமான கடைசி தலைமுறை வீரர்கள் கலைந்த போதே வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவு ஆரம்பமானது.

IND vs WI T20I

மேலும் போதிய சம்பளம் கிடைக்காததால் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்கு ரசல், நரேன் போன்ற முன்னணி வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் இளம் வீரர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வாரியமும் பொருளாதார தவிக்கிறது. இந்நிலையில் குறைவான பணத்தை கொடுக்கும் ஒப்பந்தத்திற்கு பதிலாக போட்டி சம்பளத்தை அதிகரிப்பதே வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கான வழியென்று இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தங்களின் குடும்பத்தை பாதுகாக்கும் அளவுக்கு தேவையான பணம் வங்கியில் இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அணுகுமுறை மாறும் என்று அந்த அணி வாரியத்திற்கு அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். 1970களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகி அதிக சதங்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள கவாஸ்கர் இன்று தமக்கு மிகவும் பிடித்த அணி இப்படி சரிந்துள்ளதை பற்றி சமீபத்திய பேட்டியல் ஆதங்கத்துடன் பேசியது பின்வருமாறு. “அங்கு தான் என்னுடைய முதல் சுற்றுப்பயணம் நடந்தது. அங்கிருப்பவர்களில் நிறைய பேரை எனக்கு தெரியும்”

Gavaskar

“மேலும் அவர்களுடைய முன்னாள் வீரர்கள் விட்டுச் சென்ற மரபையும் நான் அறிவேன். அவர்களிடம் அழகான பின் தங்கிய சுபாவம் இருக்கிறது. ஆனால் விளையாடும் போது சில சமயங்களில் ஒரு நிதானமான குணம் உங்களுக்கு அதிக பலனை தராது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக க்ளைவ் லாய்ட், மால்கம் மார்சல், ரிச்சர்ட்ஸ், ஆண்டி ராபர்ஸ், மைக்கேல் ஹோல்டிங், கார்னர் போன்றவர்கள் விளையாடிய ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் எக்ஸ்ட்ரா வருமானமாக இருந்தது”

இதையும் படிங்க:2023 உலகக்கோப்பை : இந்தியா பாகிஸ்தான் போட்டியால் விமான பயணிகள் சந்திக்கவுள்ள சிக்கல் – இதெல்லாம் ரொம்ப ஓவர்

“ஆனால் தற்போது டெஸ்ட் அல்லது டி20 என எந்த வகையான கிரிக்கெட்டில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் ஆயிரம் டாலர்கள் போன்ற ஒப்பந்தம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதனால் ஒரு ரன் அல்லது விக்கெட் எடுப்பதற்கு முன்பாக மேற்கிந்திய சுபாவத்தை அடிப்படையில் வைத்து அவர்களுடைய வங்கியில் பணம் இருக்க வேண்டும். என்னுடைய பரிந்துரை என்னவெனில் அவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்காமல் போட்டியின் சம்பளத்தை அதிகரிங்கள். ஒருவேளை சிறந்த செயல்பாடுகளுக்கு நீங்கள் அதிக பணம் கொடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அணுகுமுறை மாறலாம்” என்று கூறினார்.

Advertisement