2023 உலகக்கோப்பை : இந்தியா பாகிஸ்தான் போட்டியால் விமான பயணிகள் சந்திக்கவுள்ள சிக்கல் – இதெல்லாம் ரொம்ப ஓவர்

Flight
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசி 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற உள்ள வேளையில் இந்த தொடரானது ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது வரும் அக்டோபர் 15ஆம் தேதி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

worldcup

- Advertisement -

உலகக் கோப்பை தொடரில் எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினை பெறும். அந்த வகையில் தற்போது எதிர் வரவுள்ள இந்த உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் போட்டியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்து விமான பயணிகள் அனைவரையும் சிக்கலை சந்திக்க வைத்துள்ளது. ஏனெனில் அகமதாபாத்திற்கு வழக்கமாக சென்னையில் இருந்து செல்லும் விமான கட்டணம் 10,000 ரூபாய் அளவுக்கு இருக்கும்.

INDvsPAK-1

ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் அந்த அக்டோபர் 15 ஆம் தேதிக்கும் முன்பும் பின்பும், அதாவது அக்டோபர் 14 முதல் 16 வரை சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு விமானம் மூலம் சென்றால் 45,425 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அதாவது வழக்கமான விலையுடன் மும்மடங்கு விமான டிக்கெட் அதிகரித்துள்ளது.

- Advertisement -

வழக்கமாக விமான டிக்கெட்டுகளை சில மாதங்களுக்கு முன்னரே பதிவு செய்தால் கட்டணம் சற்று குறைவாக இருக்கும் ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டியை ஒட்டி அந்த மூன்று நாட்களில் எந்த டிக்கெட்டை பதிவு செய்தாலும் 45 ஆயிரம் ரூபாய் தான் என்று காட்டுகிறது. மேலும் அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல் அறைகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அதை பத்தி பேசவே பயமா இருக்கு, எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு காரணத்தை சொல்லுங்க – இளம் வீரர் வேதனை பேட்டி

பாகிஸ்தான் அணி இந்தியா வந்து இந்த தொடரில் பங்கேற்குமா? பங்கேற்காதா? என்றே இதுவரை உறுதியாகாத வேளையில் விமான டிக்கெட் விலையும், ஹோட்டல் அறைகளின் கட்டணமும் உயர்ந்துள்ளதை கண்ட ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement