IND vs AUS : நம்ம செய்றது நமக்கே வினையாகுது, பேசாம அதை செய்ங்க – பிட்ச் விவகாரத்தில் இந்தியாவுக்கு கவாஸ்கர் புதிய கோரிக்கை

Gavaskar
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக எளிதாக வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை இந்தியா அமைத்துள்ளதாக இத்தொடரின் ஆரம்பத்திலேயே விமர்சித்த ஆஸ்திரேலியர்களை இந்திய ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

IND vs AUS Indore Pitch

ஆனால் தமக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வது போல் 3வது போட்டியில் தோல்வியை சந்தித்த பின் இந்தியாவில் அமைக்கப்படும் பிட்ச்கள் பற்றி இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களுமே விமர்சிக்க துவங்கியுள்ளனர். ஏனெனில் நாக்பூர் மற்றும் டெல்லியை விட 3வது போட்டி நடைபெற்ற இந்தூரில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி எதிர்பாராத அளவுக்கு பந்து திரும்பியதால் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா உள்ளிட்ட எந்த தரமான இந்திய பேட்ஸ்மேன்களாலும் தாக்குப்பிடித்து விளையாட முடியவில்லை. மேலும் என்னதான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் பொதுவாக கடைசி 2 நாட்களில் தான் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

- Advertisement -

கவாஸ்கர் கோரிக்கை:
ஆனால் இப்போதெல்லாம் முதல் நாளிலேயே பிட்ச் சுழ ல்வதால் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் 5வது நாள் தொடுவதை குதிரை கொம்பாகி விட்டது. அத்துடன் ஒரு காலத்தில் வீரேந்திர சேவாக் சென்னை சேப்பாக்கத்தில் முச்சதம் அடிக்கும் அளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருந்த இந்திய மைதானங்கள் இப்போதெல்லாம் இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கையின் படி ஆஸ்திரேலியா குற்றம் சாட்டுவது போல் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமாக அமைக்கப்படுகின்றது.

Pitch

அதற்கு சாட்சியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற அகமதாபாத் நகரில் நடைபெறும் 4வது போட்டியில் வேகத்துக்கு சாதகமான பிட்ச் அமைக்குமாறு கேட்டுக் கொள்ள உள்ளதாக 3வது போட்டியின் துவக்கத்தில் தெரிவித்த கேப்டன் ரோகித் சர்மா நாங்கள் தான் இது போன்ற சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட விரும்பி அவ்வாறு அமைக்க சொல்வதாக பிட்ச் பற்றிய விமர்சனங்களுக்கு வெளிப்படையான பதிலை கொடுத்தார். ஆனால் உண்மையாகவே பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்த மைதானப் பராமரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர சொந்த மண்ணாக இருந்தாலும் இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்யக்கூடாது என்பதே நியாயமாகும்.

- Advertisement -

இந்நிலையில் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைப்பது இறுதியில் நமக்கே ஆபத்தாக வருவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2012இல் அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியின் கிரேம் ஸ்வான், மாண்டி பனேசர் ஆகியோர் இப்படி சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் கடைசியாக இந்தியாவை தோற்கடித்ததை சுட்டிக்காட்டும் அவர் இனியாவது வழக்கமான பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுக்கு சமமான பிட்ச்களை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Sunil-gavaskar

இல்லையேல் நம்மால் எளிதாக வெற்றி பெற முடியும் என்றாலும் இந்தூருக்கு “மோசம்” என்று ரேட்டிங் வழங்கியது போல் அகமதாபாத் மைதானத்திற்கும் ஐசிசி மோசமான ரேட்டிங் வழங்குவதை பார்க்க நேரிடும் என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த விவகாரத்தில் சற்று அதிகமாக சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இதே போன்ற பிட்ச்களை பயன்படுத்தி 2012 – 2013இல் கிரேம் ஸ்வான் மற்றும் மான்டி பனேசர் ஆகியோர் பந்தை சுழற்றி இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தது இந்தியாவுக்கு வினையாக மாறியது”

இதையும் படிங்க:IND vs AUS : அவர மாதிரி பணத்துக்கு ஆசைப்படாத பிளேயர பார்ப்பது மிகவும் அரிது – இந்திய நட்சத்திர வீரரை ஓப்பனாக பாராட்டிய டிகே

“இந்த தரத்தில் பிட்ச்கள் இருப்பது சிறந்த ஐடியா இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான பிட்ச்களை தான் விரும்புவீர்கள். குறிப்பாக முதலிரண்டு நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களும் ஆதிக்கம் செலுத்துவதையே அனைவரும் விரும்புவார்கள். 3 – 4 ஆகிய நாட்களில் தான் பந்து லேசாக சுழலும். அகமதாபாத் போட்டியில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அங்கேயும் இதே போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச் இருந்தால் நிச்சயமாக இந்தியா வெல்லும். ஆனால் அந்த பிட்ச் அதற்காக நிச்சயமாக ஐசிசியிடம் இருந்து கருப்பு புள்ளிகளை பெறும்” என்று கூறினார்.

Advertisement