ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது. வழக்கம் போல இந்த வருடமும் பெரும்பாலானப் போட்டிகளில் பௌலர்களை அடித்து நொறுக்கி பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்து வருகிறார்கள். அதன் காரணமாக விரைவில் ஒரு போட்டியில் 300 ரன்கள் அடிக்கப்பட்ட சாதனை படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான நியாயமான நிலை இல்லை என்று ரபாடா, சர்துள் தாக்கூர் போன்ற பவுலர்கள் விமர்சித்து வருகிறார்கள். எனவே பவுலர்களுக்கு சாதகமாக ஏதாவது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இந்நிலையில் இப்போதெல்லாம் மைதானங்களில் ரசிகர்களை கவர்வதற்காக பௌண்டரிகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பவுலர்களை காப்பாற்ற:
எனவே விளம்பரப் பலகைகளை நகர்த்தி விட்டு பவுண்டரியை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கினால் நிறைய சிக்ஸர்கள் கேட்ச்சாக மாறும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனால் பவுலர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கும் அவர் ஆட்டநாயகன் விருதுக்கான பரிசுத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நிறைய எல்இடி விளம்பரப் பலகைகள் மைதானத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டிருப்பதால் பௌண்டரி அளவு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. நிறைய சமயங்களில் பௌண்டரி எல்லையை மட்டுமே தாண்டக்கூடிய சிக்ஸர்களை நாம் பார்க்கிறோம். எனவே அந்த எல்இடி பலகைகளை நகர்த்தினால் பௌண்டரி அளவுகள் இன்னும் சில மீட்டர்கள் பெரிதாகும்”
பாக்கெட் மணி மாதிரி:
“அது விக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பை கொடுக்கும். சொல்லப்போனால் நிறைய சிக்சர்கள் வெறும் சில அடிகளில் பௌண்டரி எல்லையை கடக்கின்றன. எனவே பௌண்டரியை பெரிதாக்கினால் பேட்ஸ்மேன்கள் அடிக்கணும் சிறிய சிக்ஸர்கள் எதிராக விக்கெட்டாக மாறும். அதே போல போட்டியின் முடிவில் கொடுக்கப்படும் பரிசுத்தொகையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போது ஸ்பான்சர்ஷிப், ஒளிபரப்பு உரிமை போன்ற பல்வேறு விஷயங்கள் பெருமளவு உயர்ந்துள்ளது”
இதையும் படிங்க: 116க்கு ஆல் அவுட்.. கொல்கத்தாவுக்கு ஆட்டம் காட்டிய இளம் மும்பை வீரர்.. 18 வருட ஐபிஎல் வரலாறு காணாத சாதனை
“ஆனால் ஆட்டநாயகன் விருது மட்டும் 2008இல் இருந்தது போலவே இன்னும் அப்படியே இருக்கிறது. ஐபிஎல் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மறுபுறம் ஆட்டநாயகன் விருதுக்கு கொடுக்கப்படும் பரிசுத்தொகை நாங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த போது எங்களுடைய பெற்றோர்கள் கொடுத்த பாக்கெட் பணம் போல கொஞ்சமாக இருக்கிறது” என்று கூறினார்.



