ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் 12வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கொல்கத்தாவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு சுனில் நரேன் ஆரம்பத்திலேயே ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
மறுபுறம் தடுமாறிய டீ காக் 1 ரன்னில் தீபக் சஹர் வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் ரஹானேவை 11 ரன்னில் அறிமுக வீரர் அஸ்வனி குமார் அவுட்டாக்கினார். அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயர் தடுமாற்றமாக விளையாடி 3 ரன்னில் தீபக் சஹர் வேகத்தில் அவுட்டானார்.
வரலாறு காணாத சாதனை:
அப்போது அதிரடியாக விளையாட முயற்சித்த அங்கிரிஸ் ரகுவன்சியை 26 (16) ரன்களில் அவுட்டாக்கிய அஸ்வனி மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த ரிங்கு சிங்கை 17 (14) ரன்னில் காலி செய்தார். அதோடு நிற்காத அவர் அடுத்ததாக வந்த அனுபவ வீரர் மணிஷ் பாண்டே 19, காட்டடி வீரர் ஆண்ட்ரே ரசலை 5 ரன்களில் போல்டாக்கி தெறிக்க விட்டார்.
இறுதியில் மந்திப் சிங் 22 (12) விக்கெட்டுகள் எடுத்தும் 16.2 ஓவரில் கொல்கத்தாவை வெறும் 116 ரன்களுக்கு மும்பை சுருட்டி வீசியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 23 வயதாகும் அறிமுக இளம் வீரர் அஸ்வனி குமார் 3 ஓவரில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்து சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மும்பை வெற்றி:
இதற்கு முன் 18 ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த இந்திய வீரரும் தனது அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. அடுத்ததாக விளையாடிய மும்பைக்கு ரோஹித் சர்மாவை 13 ரன்னில் அவுட்டாக்கிய ரசல் அடுத்து வந்த வில் ஜேக்ஸ் விக்கெட்டை 16 ரன்னில் எடுத்தார். ஆனால் மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் ரியான் ரிக்கல்டன் அதிரடியாக விளையாடி சதத்தை அடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
இதையும் படிங்க: இப்படியே பண்ணா நாங்க ஹோம் கிரவுண்டை மாத்தக்கூட தயார்.. ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்திற்கு சன்ரைசர்ஸ் எச்சரிக்கை
இறுதியில் கேப்டன் சூரியகுமார் அதிரடியாக 27* (9), ரிக்கள்டன் 62* (41) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 12.5 ஓவரிலேயே 121-2 ரன்களை எடுத்த மும்பை தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. மறுபுறம் பேட்டிங்கில் இந்த வருடம் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்த கொல்கத்தா 2வது தோல்வியை சந்தித்தது.



