இப்படியே பண்ணா நாங்க ஹோம் கிரவுண்டை மாத்தக்கூட தயார்.. ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்திற்கு சன்ரைசர்ஸ் எச்சரிக்கை

Kavya SRH
- Advertisement -

இந்தியாவில் கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் ஆண்டு தோறும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் வேளையில் இதுவரை 17 சீசன்களை நிறைவு செய்துள்ள இந்த தொடரின் 18 ஆவது சீசனானது கடந்த மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது .அதனை தொடர்ந்து தற்போது முதல் வாரத்தினை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தை விட்டு வெளியேறிய தயார் : சன் ரைசர்ஸ் நிர்வாகம் எச்சரிக்கை

மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரின் இறுதி போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் ஒன்றான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது ஹோம் கிரவுண்டாக ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் விளையாடி வருகிறது. ஆனால் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகத்திற்கும் சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் இருந்து வருவதாக கூறப்பட்டது.

ஏனெனில் சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ஹைதராபாத் மாநில கிரிக்கெட் நிர்வாகத்திற்கு குறிப்பிட்ட அளவிலான இலவச டிக்கெட்டுகள் ஒவ்வொரு போட்டிக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஹைதராபாத் கிரிக்கெட் வாரிய தலைவர் தங்களுக்கு கூடுதலாக இன்னும் 20 இலவச டிக்கெட் வேண்டும் என்று சன் ரைசர்ஸ் அணியிடம் கேட்டிருந்தார்.

- Advertisement -

ஆனால் அதனை சன் ரைசர்ஸ் நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது ராஜீவ் காந்தி மைதானத்தின் ஒரு பகுதி பூட்டப்பட்டது. அதன் காரணமாக அதிருப்தி அடைந்த சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் அம்மாநில நிர்வாகத்திற்கு ஒரு மெயில் ஒன்றை அனுப்பியது.

இதையும் படிங்க : இந்த ஐ.பி.எல் தொடரில் நான் வீழ்த்த நினைக்கும் பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்.. பட்டியலிட்ட வருண் சக்ரவர்த்தி

அதில் ஹைதராபாத் வாரிய தலைவர் கூடுதல் இலவச டிக்கெட்டை கேட்டு மிரட்டுவதாகவும், ஆனால் நாங்கள் எந்த நிபந்தனைக்கும் அடிபணிய மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி உங்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் நாங்கள் ஹைதராபாத் மைதானத்தை விட்டே வெளியேற வேண்டும் என்றாலும் அதனை செய்யக்கூட தயார் என சன்ரைசஸ் அணி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement