கேப்டன் என்ற பொறுப்பு கொஞ்சம் கூட இல்ல, தோல்விக்கும் நீங்களே பொறுப்பு – நட்சத்திர வீரர் மீது கவாஸ்கர் காட்டம்

Sunil-gavaskar
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு விளையாடப் போகும் அணிகளை தீர்மானிக்கும் லீக் சுற்றுப் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 7 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலைமையில் அந்த அணி அடுத்த 2 போட்டிகளில் வென்றால் தாராளமாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாக் – அவுட் சுற்றை நோக்கிய பயணத்தில் தங்களது 12-வது லீக் போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

David Warner Marsh

நவிமும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 160/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஜோஸ் பட்லர் 7 (11) ஜெய்ஸ்வால் 19 (19) ஆகிய தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக 3-வது இடத்தில் களமிறங்கி அசத்திய தமிழக வீரர் அஸ்வின் 4 பவுண்டரி 2 சிக்சருடன் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை விளாசி 50 (38) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் தோல்வி:
ஆனால் அந்த நேரத்தில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 6 (4) ரன்களிலும் ரியன் பரக் 9 (5) ரன்களிலும் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். நல்லவேளையாக அஷ்வினுடன் பேட்டிங் செய்த தேவ்தூத் படிக்கல் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 48 (30) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். அதைத்தொடர்ந்து 161 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மிச்செல் மார்ஷ் அதிரடியாக 89 (62) ரன்களும் டேவிட் வார்னர் 52* (41) ரன்களும் சேர்த்து 144 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர்.

முன்னதாக இப்போட்டியில் ராஜஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் பினிஷராக கருதப்படும் சிம்ரோன் ஹெட்மையர் தனது குழந்தை பிறப்புக்காக தாயகம் சென்றுள்ளார். எனவே அதை சமாளிப்பதற்காக அஷ்வினை 3-வது களமிறக்கிய அந்த அணி நிர்வாகம் பினிஷிங் வேலையை கேப்டன் சஞ்சு சாம்சனிடம் ஒப்படைத்தது. அதில் அஷ்வின் அட்டகாசமாக பேட்டிங் செய்து 50 ரன்கள் எடுத்து தனது கொடுத்த வேலையை கச்சிதமாக முடித்தார். ஆனால் 5-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து பேட்டிங் செய்யாமல் வழக்கம் போல 1 பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கினாலும் 6 ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

தோல்விக்கு பொறுப்பு:
ஒருவேளை அவர் பொறுப்புடன் கணிசமான ரன்களை எடுத்திருந்தால் கூட 20 – 30 ரன்களை எடுத்து கூடுதலாக ராஜஸ்தான் எக்ஸ்ட்ராவாக வெற்றிக்கு போராடியிருக்க முடியும். பொதுவாகவே கேப்டன் என்பவர் ஒவ்வொரு போட்டியிலும் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்ற சூழ்நிலையில் நேற்றைய போட்டியில் எக்ஸ்ட்ராவாக ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்ட சஞ்சு சாம்சன் அதில் சிறப்பாக செயல்பட தவறியது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் டெல்லிக்கு எதிரான தோல்விக்கு பொறுப்பின்றி செயல்பட்ட சஞ்சு சாம்சன் பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் காட்டமாக பேசியுள்ளார்.

Gavaskar

இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் பந்தை மிகச்சிறப்பாகப் அடிக்கக் கூடியவர் என்றாலும் பேட்டிங் ஆர்டரில் கீழே களமிறங்கி தனக்குத்தானே உதவியை செய்ய மறுத்துவிட்டார். நீங்கள் 4-வது இடத்தில் விளையாடினால் நீங்கள் நேரடியாக 4 அல்லது 3-வது இடத்தில் பேட்டிங் களமிறங்கி பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் தற்போது என்ன ஆனது என்று பாருங்கள். ராஜஸ்தான் விரும்பிய தொடக்கம் கிடைக்காததால் திடீரென நடுவரிசையில் களமிறங்கிய அவர் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட முயன்றார். அந்த முயற்சியில் வழக்கம் போல திடீரென ஆட்டமிழந்தார்” என்று பேசினார்.

- Advertisement -

4-வது இடத்தில் களமிறங்க முடிவெடுத்து விட்டால் அஸ்வின் அவுட்டானதும் களமிறங்கி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் கவாஸ்கர் ராஜஸ்தான் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்காததால் அழுத்தத்தை உணர்ந்த சஞ்சு சாம்சன் பொறுப்பை மறந்து வழக்கம் போல நல்ல தொடக்கத்தை பெற்றாலும் திடீரென ஆட்டமிழந்தார் என்று கூறினார்.

இதையும் படிங்க : ஸ்டம்ப்பில் பட்டும் அவுட்டில்லை, பவுலர்கள் பாவம் ! ரூல்ஸ் அப்டேட் செய்ய எழுந்த நியாயம் கோரிக்கை

இந்த போட்டி மட்டுமல்லாது பெரும்பாலான போட்டிகளில் சிறப்பாக அதிரடியாக தொடங்கும் அவர் திடீரென அவுட்டாவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 327 ரன்களை 155.71 என்ற சூப்பரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ள அவர் பொறுப்புடன் பேட்டிங் செய்திருந்தால் 500 ரன்களை கடந்திருப்பார் என்றே கூறலாம்.

Advertisement