ஸ்டம்ப்பில் பட்டும் அவுட்டில்லை, பவுலர்கள் பாவம் ! ரூல்ஸ் அப்டேட் செய்ய எழுந்த நியாயம் கோரிக்கை

David Warner Chahal Bowled Bails
- Advertisement -

காலத்தின் வளர்ச்சிக்கேற்ப கிரிக்கெட்டில் எப்போதுமே ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் மாற்றங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அது போன்ற ஒரு கோரிக்கை தற்போது ஐபிஎல் 2022 தொடரில் வலுவாக எழுந்துள்ளதை பற்றி பார்ப்போம். ஐபிஎல் 2022 தொடரில் மே 11-ஆம் தேதி நடந்த 58-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் சந்தித்தன. நவிமும்பையில் விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டியில் ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்து.

David Warner Marsh

- Advertisement -

அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 160/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 3-வது இடத்தில் களமிறங்கிய அட்டகாசமாக பேட்டிங் செய்த தமிழகத்தின் அஸ்வின் 4 பவுண்டரி 2 சிக்சருடன் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதம் கடந்து 50 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் தேவ்தூத் படிக்கல் அதிரடியாக 48 (30) ரன்கள் சேர்த்தார்.

சர்ச்சையான பந்து:
அதை தொடர்ந்து 161 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலியாவின் மிட்சல் மார்ஷ் அதிரடியாக 89 (62) ரன்களும் டேவிட் வார்னர் 52* (41) ரன்களும் எடுத்து 144 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிபெற வைத்தனர். இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பில் பந்துவீசிய ராஜஸ்தானுக்கு 9-வது ஓவரை வீசிய சஹால் அதை எதிர்கொண்ட டேவிட் வார்னரை போல்ட்டாக்கினார். அந்த பந்து ஸ்டம்பில் பட்டதால் வெளிச்சத்தில் மின்னிய போதிலும் ஃபெயில்ஸ் கீழே விழாததால் தப்பிய வார்னர் கடைசி வரை அவுட்டாகாமல் 52* ரன்கள் விளாசி தோல்வியை பரிசளித்தார்.

David Warner Mitchell Marsh

இந்த தருணம் தற்போது பெரிய சர்ச்சையாக மாறி பல விவாதங்களை எழுப்பியுள்ளது. இது பற்றி முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது பின்வருமாறு. “பெய்ல்ஸ் விழும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா அல்லது பெய்ல்ஸ் விழுந்தாலும் இல்லை என்றாலும் பேட்ஸ்மென் அவுட் கொடுக்கப்பட வேண்டுமா? இதற்காக 2 கேள்விகள் உள்ளது. பெய்ல்ஸ் கீழே விழவைக்க வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று பந்து ஸ்டம்பில் பட்டாலே அவுட்டென கருத வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த தருணத்தில் ஸ்டம்ப் மீது பந்து பட்ட போதே டேவிட் வார்னர் அவுட்டென நியாயப்படி உறுதியாகி விட்டது. ஆனால் விதிமுறைப்படி பெயில்ஸ் விழும் வரை காத்திருக்க வேண்டுமா அல்லது நியாயப்படி ஸ்டம்ப்பில் பந்து பட்டதும் பேட்ஸ்மேனை அவுட் கொடுக்க விதிமுறையில் மாற்றம் செய்ய வேண்டுமா என 2 கேள்விகளில் எது நியாயமானது என்று இர்பான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே ஒயிட், நோ பால், பிரீ ஹிட் என பல அடிப்படை கிரிக்கெட் விதிமுறைகள் பவுலர்களுக்கு எதிராக அமைந்துள்ளதால் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் பந்து வீச்சாளர்களின் நிலைமை படாத பாடாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இது போன்ற நியாயமற்ற விதிமுறைகளும் அவர்களுக்கு அநீதியையே வழங்குகிறது என்று இர்பான் பதான் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

மேலும் பொதுவாக எல்பிடபிள்யூ முறையில் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை என்றால் அதை ரிவியூ செய்யும் போது பந்து ஸ்டம்ப்பில் படுகிறதா என்று மட்டுமே 3-வது அம்பயர் பார்த்து தீர்ப்பு வழங்குவார். பெயில்ஸ் விழுகிறதா இல்லையா என்பதை பற்றி பார்ப்பது கிடையாது. அப்படி கற்பனையாக சோதிக்கப்படும் டிஆர்எஸ் ரிவியு முறையிலேயே பெயில்ஸ் விழுகிறதா இல்லையா என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாத போது நிஜத்தில் ஸ்டம்ப் மீது பந்து படும் போது மட்டும் பெயில்ஸ் கீழே விழவில்லை என்பதற்காக அவுட் கொடுக்க மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.

நியாயமான கோரிக்கை:
மேலும் பெரும்பாலான தருணங்களில் பவுண்டரியை தடுக்க பீல்டர்கள் முயற்சி செய்யும் போது அவர்களின் உடலில் பந்து பட்டிருக்கும் போது அந்த பீல்டரின் உடலில் ஏதேனும் ஒரு பகுதி பவுண்டரியை தொட்டால் கூட உடனடியாக அம்பயர்கள் பவுண்டரி வழங்குகின்றனர். மாறாக பந்து பவுண்டரி எல்லையைக் கடந்ததா என்பது பற்றி யோசிப்பது கூட கிடையாது. அதுபோன்ற சமயத்தில் ஸ்டம்ப் மீது பந்து பட்டாலும் பெயில்ஸ் கீழே விழவில்லை என்பதற்காக அவுட் கொடுக்க மறுப்பது கண்டிப்பாக நியாயமே கிடையாது என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வெளிப்படையாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க : இந்த வருஷம் சி.எஸ்.கே டீம் வாங்குன நல்ல பிளேயர்ன்னா அது இவர்தான் – வாசிம் ஜாபர் பாராட்டு

மேலும் தற்போது பெரும்பாலான கிரிக்கெட்டில் எல்இடி ஸ்டம்ப்கள் பயன்படுத்தப்படுவதால் அதில் உள்ள பெயில்ஸ் மிகுந்த கணத்துடன் தயாரிக்கப்படுவது கீழே விழ மறுப்பதற்கு ஒரு காரணமாகும். ஆனால் முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட மரத்திலான பெயில்ஸ் பட்ட உடனே கீழே விழுந்துவிடும். எனவே காலத்தின் கட்டாயத்திற்கேற்ப ஸ்டம்ப்பில் பந்து பட்டாலே பேட்ஸ்மேன் அவுட் என்று அடிப்படை விதி முறையில் மாற்ற வேண்டும் என்று நியாயமான கோரிக்கையை பலரும் வலுவாக முன்வைக்கின்றனர்.

Advertisement