ரொம்ப நன்றி தம்பி, இப்டி தான் கேப்டன்ஷிப் பண்ணனும் – பாபர் அசாமின் தவறை சுட்டிக்காட்டிய கவாஸ்கர்

Sunil Gavaskar 5
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் தங்களுடைய முதல் போட்டியில் நேபாளை தோற்கடித்த பாகிஸ்தான் அதில் பெற்ற 1 புள்ளியுடன் சேர்த்து 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. மறுபுறம் அப்போட்டியில் ஒரு புள்ளி மட்டுமே பெற்ற இந்தியா சூப்பர் 4 சுற்று தகுதி பெற இன்று நடைபெறும் நேபாளுக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஷாஹீன் அப்ரிடியின் தரமான ஸ்விங் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் க்ளீன் போல்ட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல ஹரிஷ் ரவூப் வேகத்துக்கு தாங்க முடியாமல் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் சொற்கள் அவுட்டானதால் 66/4 என திண்டாட்டமான துவக்கத்தை பெற்ற இந்தியா 150 ரன்களை கூட தாண்டாது என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டது.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:
ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய இஷான் கிசான் 82 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 87 ரன்களும் அடித்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு அவமானத்திலிருந்து காப்பாற்றி 267 என்ற நல்ல வெற்றி இலக்கை நிர்ணயிக்க உதவினர். அதனால் ஒருவேளை மழை வராமல் இருந்து இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தால் பாகிஸ்தானை தோற்கடித்திருக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் 170 – 200 ரன்களுக்குள் இந்தியாவை சுருட்டும் அளவுக்கு நல்ல துவக்கத்தை பெற்றும் தொடர்ந்து அட்டாக் செய்யாமல் மிடில் ஓவர்களில் பாபர் அசாமின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். மறுபுறம் அதை பயன்படுத்தி ரொம்ப நன்றி தம்பி என்பது போல் இந்தியா அபாரமாக செயல்பட்டதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்களின் பவுலிங் மாற்றங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“ஏனெனில் உங்களிடம் ஆரம்பத்திலேயே விக்கெட்களை எடுத்த 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போது நீங்கள் அவர்களில் ஒருவரையாவது தொடர்ந்து பயன்படுத்தியிருக்க வேண்டும். அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து வீசுவது கடினம் என்பதை நான் அறிவேன். ஆனால் சடாப் அல்லது நவாஸ் ஒருபுறமும் மற்றொருபுறம் வேகப்பந்து வீச்சாளாரும் மிடில் ஓவர்களில் பந்து வீசியிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: வீடியோ : அன்று கிண்டலடித்தவர்களுக்கு.. இன்று 221 சேசிங்கில் 4 பவுண்டரி 12 சிக்சருடன் – கோலி போல பதிலடி கொடுத்த கார்ன்வால்

“இருப்பினும் அவர்கள் அதை செய்ய தவறியதற்கு “மிகப்பெரிய நன்றி” என்று சொல்வது போல் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. ஏனெனில் அவர்கள் இந்தியா பார்ட்னர்ஷிப் அமைக்க வழி விட்டார்கள். ஒருவேளை அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் இசான் கிசான் மற்றும் பாண்டியா ஆகியோரில் யாரையாவது ஒருவரை முன்கூட்டியே அவுட்டாக்கியிருந்தால் நிச்சயமாக இந்தியா 175 – 200 ரன்களை தொடுவதற்கே சிரமப்பட்டிருக்கும்” என்று கூறினார்.

Advertisement