52 வருட ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் பரிதாபமான சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர் – தனித்துவ புள்ளிவிவரம் இதோ

Mujeeb ur Rahman Hit Wicket
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் செப்டம்பர் 3ஆம் தேதி பாகிஸ்தானின் கடாஃபி நகரில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த வங்கதேசம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற அசத்தியுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 334/5 ரன்கள் குவித்து வெளிநாட்டு மண்ணில் ஒரு போட்டியில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது.

அந்தளவுக்கு பேட்டிங்கில் அசத்திய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் மெகதி ஹசன் சதமடித்து 112 ரன்களும் நஜ்முல் சாண்டோ சதமடித்து 104 ரன்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து 335 என்ற மிகவும் கடினமான இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 1, ராகில் ஷா 33, நஜிபுல்லா ஜாட்ரான் 17, முகமது நபி 3 போன்ற முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜாட்ரான் 75 ரன்களும் கேப்டன் ஷாஹிதி 51 ரன்களும் போராடியும் 44.3 ஓவரில் 245 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம் பெரிய தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பரிதாபமான சாதனை:
அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்தி பெரிய வெற்றியை பெற்ற வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளும் சோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் 335 ரன்களை சேசிங் செய்யும் போது திண்டாடிய ஆப்கானிஸ்தானுக்கு 10வது வீரராக களமிறங்கிய முஜிப் உர் ரகுமான் 4 ரன்கள் எடுத்திருந்த போது தஸ்கின் அஹ்மத் வீசிய 45வது ஓவரின் முதல் பந்தை பின்னோக்கி சென்று எதிர்கொண்டார்.

ஆனால் அதற்காக ரொம்பவே பின்னோக்கி சென்ற அவருடைய கால் ஸ்டம்ப்புகளில் மோதியதால் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து சென்றார். மேலும் இப்போட்டிக்கு முன்பாக கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 50 ரன்கள் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சரித்திரம் படைத்த அவர் 64 (37) ரன்கள் எடுத்திருந்த போது ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார்.

- Advertisement -

அதன் வாயிலாக ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டான முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பரிதாபமான சாதனை படைத்த அவர் அப்போட்டிக்கு அடுத்ததாக களமிறங்கிய இப்போட்டியிலும் அதே போல ஹிட் விக்கெட் முறையில் அவுட்டாகியுள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாபமான உலக சாதனையை முஜீப் உர் ரஹ்மான் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ : அன்று கிண்டலடித்தவர்களுக்கு.. இன்று 221 சேசிங்கில் 4 பவுண்டரி 12 சிக்சருடன் – கோலி போல பதிலடி கொடுத்த கார்ன்வால்

கடந்த 1971 முதல் வெற்றி பெறும் ஒருநாள் போட்டிகளில் நிறைய வீரர்கள் ஹிட் விக்கெட் முறையில் ஒரு போட்டியில் அவுட்டான போதிலும் யாருமே இவரைப்போல் அடுத்தடுத்த போட்டிகளில் அவுட்டானதில்லை. அந்த வகையில் 52 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த சாதனைக்கு முஜிப் ஊர் ரகுமான் சொந்தக்காரராகியுள்ளார். இதைத்தொடர்ந்து சூப்பர் 4 சுற்று தகுதி பெற தன்னுடைய கடைசி போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆப்கானிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement