- Advertisement -
உலகக் கோப்பை 2023

IND vs AFG : அஸ்வின் என்ன தப்பு பண்ணாரு.. இல்லனா அவரையாச்சும் எடுத்திருக்கலாம்.. இந்திய அணியை சாடிய கவாஸ்கர்

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றி பயணத்தை துவங்கியது. அதைத்தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி தலைநகர் டெல்லியில் ஆப்கானிஸ்தானை தங்களுடைய 2வது போட்டியில் இந்திய அணி எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

மறுபுறம் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்ட சர்தூள் தாகூர் தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது. குறிப்பாக டெல்லி மைதானத்தில் நடைபெற்ற கடந்து போட்டியில் இலங்கையை அடித்து நொறுக்கிய தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.

- Advertisement -

கவாஸ்கர் விமர்சனம்:
அதன் காரணமாக பேட்டிங்க்கு சாதகமான அந்த மைதானத்தில் ஸ்பின்னர் வேண்டாம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் வேகத்தில் மிரட்டக்கூடிய முகமது ஷமியை தேர்ந்தெடுக்காமல் ரன்களை வாரி வழங்கக்கூடிய தாக்குறை தேர்ந்தெடுத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் கடந்த போட்டியில் அசத்திய அஸ்வினை இப்போட்டியில் நீக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.

ஒருவேளை அணியின் கலவைக்காக தேவைப்பட்டால் 2019 உலகக்கோப்பையில் இதே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் வீழ்த்தி சாதனை படைத்த ஷமி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகத்தை விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அஸ்வின் என்ன தவறு செய்தார். இது கடினமான முடிவாக இருக்கும். ஆனால் இத்தொடரில் பெரும்பாலான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நீங்கள் எடுத்திருக்கலாம்”

- Advertisement -

“அது போன்ற சூழ்நிலையில் 2019 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த முகமது ஷமி வாய்ப்பு பெறுவார் என்று நான் நினைத்தேன். ஏனெனில் அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர் வெற்றியை தலைகீழாக மாற்றினார். அவரை சேர்த்திருந்தால் அது எதிரணிக்கு மனதளவிலான அழுத்தத்தை கொடுப்பது போல் அமைந்திருக்கும்”

இதையும் படிங்க: IND vs AFG : போட்டி துவங்கும் முன்னர் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய வீரர்கள் – நெகிழ்ச்சியான காரணம் இதோ

“ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த அவருக்கு 2019 அணியை விட தற்போதைய ஆப்கானிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் இருந்திருந்தாலும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மறுபுறம் அணியின் நலனுக்காக அஸ்வின் இது போல் பலமுறை கழற்றி விடப்பட்டு வருகின்றார்” என்று கூறினார். முன்னதாக 2023 சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அஸ்வின் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் கழற்றி விடப்பட்டது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -