இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களை குவித்தது. பின்னர் தற்போது இரண்டாம் நாள் ஆட்ட நேரத்தில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 262 ரன்கள் மட்டுமே குவிக்க ஆஸ்திரேலியா அணி ஒரு ரன் முன்னிலையுடன் தற்போது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரரான விராட் கோலி ஆட்டமிழந்த ஒரு விவகாரம் தற்போது இணையத்தில் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறி உள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வீசிய பந்தில் விராட் கோலி டிபசென்ஸ் செய்ய முயன்றார்.
அப்போது பந்து அவரது பேட் மற்றும் கால் பேடில் ஒரே நேரத்தில் படவே பவுலர் நடுவரிடம் அவுட் கேக்க அம்பயர் அவுட் என்று அறிவித்தார். அதன் பிறகு விராட் கோலி மூன்றாவது அம்பயரின் உதவியை நாடினார். அப்போது பந்து பேட் மற்றும் கால் பேடில் ஒரே நேரத்தில் பட்டதனால் என்ன முடிவு கிடைக்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மூன்றாவது நடுவரும் தெளிவான ஆதாரம் இல்லை என்று கூறி விராட் கோலி ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறி உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மார்க் வாக் கிரிக்கெட்டில் இதுபோன்று நடப்பது இயல்பான ஒன்றுதான். இதுபோன்று நடந்தால் 10 முறைக்கு 9 முறை பேட்ஸ்மேன் தான் ஆட்டம் இழந்தார் என்று அறிவிக்கப்படுவார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் :
இதையும் படிங்க : சடகோபான் ரமேஷ்க்கு கூட இவ்ளோ சான்ஸ் கிடைக்கல – இந்திய வீரரை சரமாரியாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்
பந்து ஸ்டம்பில் படுகிறதா இல்லையா என்பது இதில் பிரச்சனையே கிடையாது. விராட் கோலி அதனை பேட்டால் அடித்தாரா? இல்லையா? என்பது தான் இதில் உள்ள பிரச்சனையே. மூன்றாவது அம்பையர் ரீப்ளே செய்து பார்க்கும் போது அவருக்கு தெளிவான ஆதாரம் கிடைக்க வேண்டும். அது கிடைக்காமல் போனதால்தான் விராட் கோலி ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார் இது துரதிஷ்டவசமான ஒன்று என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.