சடகோபான் ரமேஷ்க்கு கூட இவ்ளோ சான்ஸ் கிடைக்கல – இந்திய வீரரை சரமாரியாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்

venkatesh-prasad
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. முன்னதாக இத்தொடரில் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்து தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்பட்ட கேஎல் ராகுல் துணை கேப்டன் என்ற ஒரே காரணத்துக்காக மீண்டும் இத்தொடரில் விளையாடி வருவது யாரையுமே திருப்திப்படுத்தவில்லை.

ஏனெனில் ஆரம்ப காலங்களில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த அவர் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக 2022 ஐபிஎல் தொடருக்குப்பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் மோசமாக செயல்பட்டும் தொடர்ந்து வாய்ப்பு பெறுவது ஏன் என்பதை அனைவரது குழப்பமாக இருந்து வருகிறது.

- Advertisement -

மீண்டும் விமர்சனம்:
மேலும் 2014இல் அறிமுகமாகி 8 வருடமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 40க்கும் குறைவான பேட்டிங் சராசரியை வைத்திருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறுவதற்கு நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் நேரடியாக அவரை விமர்சித்தார். அத்துடன் உங்களுக்காக சர்பராஸ் கான், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரிவித்த அவர் உங்களுக்கு பதிலாக அஸ்வின் துணை கேப்டனாக தகுதியானவர் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் 24/11/17 தேதிக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26.15 என்ற மோசமான சராசரியில் பேட்டிங் செய்தும் ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு முரளி விஜய், சிகர் தவான் போன்றவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று ஒரு ரசிகர் ட்விட்டரில் வேதனையை வெளிப்படுத்தினார். அதை பார்த்த வெங்கடேஷ் பிரசாத் மீண்டும் வெளிப்படையாக விமர்சித்தது பின்வருமாறு.

- Advertisement -

“இவ்வளவு மோசமான புள்ளி விவரங்களை கொண்டிருந்தும் நமது நாட்டில் ஏராளமான பேட்டிங் திறமைகள் இருந்தும் இவரை 2வது சிறந்த தொடக்க வீரராக இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது” என்று விமர்சித்துள்ளார். அதற்கு முன்பாகவே முந்தைய விமர்சனத்தின் தொடர்ச்சியாக அவர் மேலும் விமர்சித்தது பின்வருமாறு. “அவருடைய சுமாரான ஆட்டம் தொடர்கிறது. அதை விட அணிக்கு பங்காற்றாத ஒரு வீரருக்கு அணி நிர்வாகம் இன்னும் விரைப்பாக ஆதரவு கொடுத்து வருகிறது. இந்திய கிரிக்கெட்டில் கடந்த 20 வருடங்களில் எந்த ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் இவ்வளவு குறைந்த சராசரியுடன் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை”

“ஆனால் அவர் சேர்க்கப்பட்டுள்ளதால் நிறைய தரமான இளம் வீரர்கள் வாய்ப்பை இழந்துள்ளார்கள். மேலும் ஷிகர் தவான் 40+ பேட்டிங் சராசரி கொண்டுள்ளார். மயங் அகர்வால் 2 இரட்டை சதங்களுடன் 41+ பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். சுப்மன் கில் சிறப்பான ஃபார்மில் உள்ளார். சர்பராஸ் கான் முடிவின்றி காத்திருக்கிறார். நிறைய உள்ளூர் ஆட்டக்காரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனாலும் அவர் தொடர்ந்து சேர்க்கப்படுவது நியாயத்தின் மீது உள்ள நம்பிக்கையில் நமக்கு தலையசைக்க வைக்கிறது”

“எஸ்எஸ் தாஸ் சிறந்த திறமையை கொண்டிருந்தார். அதே போல் சடகோபன் ரமேஷ் இருந்தார். இருவரும் 38+ பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் 23 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் வாய்ப்பு பெறவில்லை. இருப்பினும் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுவது இந்தியாவில் பேட்டிங் வீரர்களுக்கு பஞ்சம் என்பதை காட்டுகிறது. ஆனால் அது உண்மையில்லை. கடந்த 5 வருடத்தில் 47 இன்னிங்ஸில் அவருடைய சராசரி 27க்கும் குறைவாக உள்ளது”

இதையும் படிங்க: