
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது.
பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 111 ரன்கள் மட்டுமே குவித்ததால் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. இந்த போட்டியின் போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலே இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
அதிலும் குறிப்பாக கடந்த சில போட்டிகளாக விமர்சிக்கப்பட்டு வரும் திலக் வருமா இந்த போட்டியிலும் இரண்டு பந்துகளை சந்தித்த நிலையில் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தேவையில்லாத நேரத்தில் போட்டியின் ஆரம்பத்திலேயே அவர் இறங்கி வந்து ஆட்டம் இழந்தது மேலும் அவர்மீது இருக்கும் விமர்சனத்தை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் திலக் வர்மாவின் ஷார்ட் செலக்சன் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் கூறியதாவது : திலக் வர்மா ஒரு புத்திசாலித்தனமான பேட்ஸ்மேன். ஆனால் அவர் இரண்டாவது ஓவரிலேயே இறங்கி வந்து அதிரடியாக ஆட நினைத்து ஆட்டமிழந்தது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் நமக்கு தேவையான ரெட் 9.5 ஆகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் 15 ரன்கள் தேவை என்பது போல் போட்டியின் ஆரம்பத்திலேயே அவசரப்பட தேவையில்லை.
இதையும் படிங்க : அவர் செய்ததை மறந்துடீங்களா? இந்திய அணித்தேர்வினை விமர்சித்த – ரவிச்சந்திரன் அஷ்வின்
ஒருபுறம் அவர் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து பொறுப்பாக விளையாடி நல்ல ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் அதன் பின்னர் நாம் அதிரடியாக விளையாட சென்றிருக்கலாம். ஆனால் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே அவர் இறங்கி வந்து அதிரடியாக ஆட நினைத்து ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளிப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.