இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு 17-வது சீசனானது நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது போன்று மாநில அணிகளின் மூலம் நடத்தப்படும் டி20 லீக் போட்டிகளும் இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் டிஎன்பிஎல், கர்நாடகத்தில் மகாராஜா டி20 லீக், மும்பையில் எம்.பி.எல் போன்ற லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோன்று தற்போது டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பாகவும் டெல்லி பிரீமியர் லீக் ஆரம்பித்திருக்கிறது. இப்படி மாநில அணிகளை சேர்ந்த நிர்வாகங்கள் மூலம் டி20 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு அதன் மூலம் சிறந்த வீரர்களை உருவாக்கி வருகிறது. ‘
இருப்பினும் மாநில அணிகளிலிருந்து வீரர்களை தேர்வு செய்து தேவையில்லாமல் ஐபிஎல் முதலாளிகள் பணத்தை வீணடிக்கின்றனர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து வரக்கூடியவர்கள் முதல்தர போட்டிகளில் விளையாடும் போது தடுமாறுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஜூனியர் மட்டத்தில் இருக்கும் வீரர்கள் முதல்தர கிரிக்கெட்டில் சிறிது தடுமாறுகின்றனர். இதன் காரணமாகத்தான் 19 வயதுக்குட்பட்ட அணியில் இருக்கும் வீரர்கள் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாட முடிவதில்லை. மாநில டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் சையத் முஷ்டாக் அலி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியமில்லை.
ஆனாலும் அவர்கள் மீது கோடிக்கணக்கில் பணம் கொட்டி கொடுத்து ஐபிஎல் முதலாளிகள் வாங்க தயாராக இருக்கின்றனர். இப்படி வாங்குவதால் பணம் விரயம் ஆகிறதே தவிர அவர்களால் பெரிய மேடையில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இதையும் படிங்க : 13 போர்ஸ் 9 சிக்ஸ்.. ஃபார்முக்கு வந்துட்டேன்.. எனக்கு அந்த சான்ஸ் கொடுங்க.. கருண் நாயர் மறைமுக கோரிக்கை
உள்நாட்டு தொடர்களில் விளையாடி அனுபவம் பெற்றால் மட்டுமே மாநில வீரர்கள் பெரிய லெவலில் கிரிக்கெட் விளையாடும் போது சாதிக்க முடியும். அதனை தவிர்த்து அவர்களை நேரடியாக ஐபிஎல் தொடரில் தேர்வு செய்வது தவறு என சுனில் கவாஸ்கர் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.